ஒளியின் வேகம்
ஞாயிறு ஒளி புவியினை அடைய 8 நிமிடம், 19 விநாடி ஆகின்றது. |
|
| சரியான அளவீடு | |
|---|---|
| விநாடிக்கு மீட்டர் | 299,792,458 |
| செயல் ஆற்றல் அலகு | 1 |
| தோரய அளவீடு | |
| விநாடிக்கு கிலோமீட்டர் | 300,000 |
| ஒரு மணி நேரத்திற்கு கிலோமீட்டர் | 1,079 மில்லியன் |
| விநாடிக்கு மைல் | 186,000 |
| ஒரு மணி நேரத்திற்கு மைல் | 671 மில்லியன் |
| நாளுக்கான வானியல் அலகு | 173 |
| தோராயமாக ஒளி சமிக்கை கடக்கும் நேரம் | |
| தொலைவு | நேரம் |
| ஒரு அடி | 1.0 நேனோசக்கன் |
| ஒரு மீட்டர் | 3.3 நேனோசக்கன் |
| ஒரு கிலோமீட்டர் | 3.3 μs |
| ஒரு statute mile | 5.4 μs |
| geostationary orbit யில் இருந்து புவிக்கு | 119 ms |
| புவியின் நிலநடுக்கோடு நீளம் | 134 மீட்டர்விநாடி |
| நிலவுயில் இருந்து புவிக்கு | 1.3 விநாடி |
| ஞாயிறுயில் இருந்து புவிக்கு(1 AU) | 8.3 நிமிடம் |
| one பாசெக்கு | 3.26 ஆண்டுகள் |
| பிராக்சீமா விண்மீன்யில் இருந்து புவிக்கு | 4.24 ஆண்டுகள் |
| ஆல்பா விண்மீன்யில் இருந்து புவிக்கு | 4.37 ஆண்டுகள் |
| அன்மய அண்டம் யில் இருந்து புவிக்கு, | 25,000 ஆண்டுகள் |
| விண்மீன்திரள் குறுக்காக | 100,000 ஆண்டுகள் |
| அண்டோர்மிடா பேரடையில் இருந்து புவிக்கு | 2.5 மில்லியன் ஆண்டுகள் |
வெற்றிடம் ஒன்றில் ஒளியின் வேகம் (speed of light) என்பது இயற்பியலில் ஒரு அடிப்படை மாறிலி. இது பொதுவாக "c" என்னும் ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது. கட்டற்ற வெளியில் (free space), கண்ணுக்குப் புலப்படும் கதிர்வீச்சு உட்பட எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகளினதும் வேகம் இதுவே. ஓய்வுத்திணிவு பூச்சியமாக உள்ள எதனதும் வேகமும் இதுவேயாகும்.
வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.
ஒளி, ஒரு ஒளி ஊடுசெல்லவிடும் அல்லது ஒளிகசியும் பொருளினூடாகச் செல்லும்போது அதன் வேகம் வெற்றிடத்தில் உள்ள வேகத்திலும் குறைவாக இருக்கும். வெற்றிடத்தில் ஒளி வேகத்துக்கும், நோக்கப்பட்ட நிலைமை வேகத்துக்கும் இடையிலான விகிதம் குறிப்பிட்ட ஊடகத்தின் விலகல் குறியீட்டெண் (refractive index) அல்லது முறிவுக் குணகம் எனப்படும்.
பொதுச் சார்புக் கோட்பாட்டில், "c", வெளிநேரத்தின் ஒரு முக்கியமான மாறிலியாகும். ஈர்ப்பின் காரணமாக வெளிநேரம் வளைந்து இருப்பதனால், தூரம், நேரம் என்பவற்றையும்; அதனால், வேகத்தையும், தெளிவாக வரையறுக்க முடியாதுள்ளது.
பொருளடக்கம் |
குறியீட்டு முறை,மதிப்பு மற்றும் அலகு [தொகு]
வெற்றிடத்தின் ஒளியின் வேகமானது பரிமாணத்தின் இயற்பியல் காரணி என்பதால் அதன் மதிப்பு அலகு அமைப்பில் உள்ளது. பன்னாட்டு அலகு முறையில் மீட்டர் எனபது வெற்றிடத்தில் ஒளி ஒரு விநாடியில் கடக்கும் தொலைவு 1⁄299,792,458 /s ஆகும். இதன் அடிப்படையில் ஒளியின் வேகம் சரியாக 299,792,458 மீட்டர்/விநாடி.
பொதுவாக வெற்றிடத்தில் ஒளியின் வேகம் c என்று குறிப்பிடப்படுகிறது , c எனில் லத்தீனில் celeritas (பொருள்: வேகம்) ஆகும்
பரவுதல் [தொகு]
செவ்வியல் இயற்பியலில் ஒளி ஒரு மின்காந்த அலையாக புரிந்துகொள்ளப்பட்டது. செவ்விய நடத்தையானது மாக்சுவெல் சமன்பாட்டின் (Maxwell equation) படி,
c = 1/√ε0μ0,
இங்கு C என்பது வெற்றிடத்தில் பாயும் ஒளியின் வேகம், ε0 மின் மாறிலி மற்றம் μ0 காந்தமாறிலி ஆகும்.
தற்கால, குவாண்டம் இயற்பியலில் மின்காந்த புலமானது குவாண்டம் மின்னியக்கவியலாக வரையறுக்கப்படுகிறது. இக்கோட்பாட்டின் படி ஒளி என்பது அடிப்படையில் கிளர்வுற்ற (குவாண்டா) மின்காந்தபுலமான போட்டான்கள் அல்லது ஒளியன்கள் (photons) ஆகும். மின்னியக்கவியலில் ஒளியன்கள் நிறையற்ற துகளாகயால், சிறப்புச்சார்ச்சின் படி ஒளியன்கள் வெற்றடத்தில் ஒளியின் வேகத்தில் பரவுகின்றன.
ஓளி-பிரபஞ்சத்தின் வேக எல்லை [தொகு]
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின் படி ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும். ஓளியின் திசைவேகத்தை விட அதிக திசைவேகத்திற்கு எந்த ஒரு பொருளையும் முடுக்குவிக்க இயலாது.
முரண்பாடுகள் [தொகு]
சுடப்பட்ட ஒரு துப்பாக்கிக் குண்டு மரக்கட்டையைத் துழைத்து வெளியேறும் போது தனது ஆற்றலை இழப்பதால் ஆரம்ப திசைவேகத்தை விட சற்று குறைவான வேகத்தில் செல்லும். அதே போல வெற்றிடத்தில் தனக்குறிய திசைவேகத்தில் செல்லும் ஒளி வேறொரு ஊடகத்திற்கு செல்லும் போது தனது திசைவேகத்தை இழக்கும். ஆனால் மறுபடியும் அந்த ஊடகத்திலிருந்து வெற்றிடத்திற்குச் செல்லும் போது தனது பழைய திசைவேகத்தை அடைகிறது. எந்த வித முடுக்கு விசையும் இல்லாமல் தனது பழைய திசைவேகத்தை திரும்பவும் அடைவது அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஒரு விந்தையான முரணாகும். அதே போல மற்றொரு முரண் என்னவெனில் ஓடும் தொடருந்து ஒன்றில் இருந்து சுடப்பட்ட குண்டின் வேகம் தொடருந்தின் வேகம் மற்றும் குண்டின் வேகத்தின் கூடுதலுக்குச் சமமாகும், ஆனால் ஓடும் தொடருந்திலிருந்து உமிழப்பட்ட ஒளியானது எப்போதுமே மாறிலிதான். அதாவது உமிழப்பட்ட மூலத்தின் இயக்கத்தைச் சார்ந்து அமையாது.
பயன்கள் [தொகு]
ஒளியின் திசைவேகத்தை அறிவதால் நமக்குப் பல பயன்பாடுகள் உள்ளன. அவற்றுள் சில:
- ஐன்டைனின் நிறையாற்றல் சமன்பாட்டைப் பயன்படுத்த ஒளியின் திசைவேகம் ஒரு முக்கியமான மாறிலியாகும்.
- அலைகளின் அதிர்வெண் கண்டறிய உதவும் சமன்பாட்டில் ஒளியின் திசைவேகம் இன்றியமையாததாகும்.
- தூரத்தில் உள்ள கோள்களின் தொலைவு மிக மிக அதிகம். ஆவற்றை நாம் நடைமுறையில் பயன்படுத்தும் (கி.மீ) அலகுகளால் குறிப்பிட இயலாது. எனவே வானியல் அலகு பயன்படுத்தப்படுகிறது. ஒரு வானியல் அலகு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஒரு ஆண்டு பயணிக்கும் தொலைவாகும். அதாவது 149600000000 மீ ஆகும்.