ஒல்லையூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒல்லையூர் நாடு என்பது ஒல்லையூரைத் தலைநகராகக் கொண்டது. இக்காலத்தில் திருமெய்யம் வட்டத்தில் உள்ள ஒலியமங்கலம் சங்ககால ஒல்லையூர். இது பாண்டிய நாட்டின் வடவெல்லையான வெள்ளாற்றின் தென்கரையில் இருந்தது. [1] இந்த ஒல்லையூரைச் சங்ககாலத்தில் சிலகாலம் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் ஆண்டுவந்தான். ஒருமுறை சோழ வேந்தர்களால் கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு ஒரு பாண்டிய வேந்தன் இந்நாட்டை கைப்பற்றினான்.
- பூதப்பாண்டியன்
இந்நாட்டை பூதபாண்டியன் என்ற மன்னன் வென்றதால் அவன் ஒல்லையூர் த்ந்த பூதபாண்டியன் என்ப் போற்றப்படுகிறான்.[2]