ஒர்லோவ் வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒற்லோவ் வைரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒற்லோவ் வைரம் (Orlov Diamond) சுமார் 190 காரட் (அதாவது 38 கிராம்) எடை உள்ள, தற்போது மாஸ்கோ கிராம்லினிலுள்ள வைர நிதியத்தில் உள்ள அரைக்கோள வடிவிலான ஒரு பெரிய வைரக்கல்லாகும். ஆந்திர மாநிலம் கொல்லூர் சுரங்கத்தில் வெட்டப்பெற்ற இவ்வைரம், திருவரங்கம் அரங்கநாதரின் (மூலவர்) கண்களாக இருந்தமையாக அறியப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், கருநாடக போர்களில் இடம்பெற்ற ஒரு பிரான்சு வீரன், இந்துவாக மதம்மாறியவனாக வேடமிட்டுக் கோயிலின் கருவறைக்குள் நுழைந்து திருடி[1][2], பின்னர் மதராசில் (சென்னை) ஒரு பிரித்தானிய மாலுமிக்கு விற்றான். கி.பி 1750 லிருந்து பல அயல் நாட்டு வணிகர்களின் கைமாறி, ஆம்ஸ்டர்டமில் கிரிகோரி கிரிகொரிஏவிச் ஆர்லவ் எனும் ரஷியரால் 400,000 டச்சு ஹுல்டென் கொடுத்து வாங்கப்பட்டு, ரஷியா அரசி இரண்டாம் கத்ரினுக்கு பரிசளிக்கப்பட்டது. இதன் பின்னர் ரஷியாவின் ராஜாங்க கருவூலத்தில் காக்கப்பெற்று, இன்றளவும் ரஷியாவின் மாஸ்கோ கிராம்லினிலுள்ள வைர நிதியத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பெற்றுள்ளது.[3]

1904இல் வெளிவந்த Precious Stones எனும் புத்தகத்திலுள்ள ஒற்லோவ் வைரத்தின் மாதிரி வரைப்படம்.
ரஷியா பேரரசின் செங்கோலில் பதிக்கப்பெற்ற வைரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Jaques 2007, ப. 928.
  2. Erlich & Hausel 2002, ப. 66.
  3. முகில் (19 ஏப்ரல் 2019). "ஆர்லவ் வைரம்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

Anna Malecka, "Did Orlov buy the Orlov ? ", Gems & Jewellery vol. 23/ 6, July 2014, 10-12.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒர்லோவ்_வைரம்&oldid=3924762" இலிருந்து மீள்விக்கப்பட்டது