ஒற்றைத்தாடை அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tyrannobdella rex
Microscopic views: A) jaw of Tyrannobdella rex; B) anterior suction cup; C) teeth of T. rex; D) teeth of leech Limnatis paluda
உயிரியல் வகைப்பாடு
திணை:
பெருந்தொகுதி:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
குடும்பம்:
பேரினம்:
Tyrannobdella
இனம்:
T. rex
இருசொற் பெயரீடு
Tyrannobdella rex
Phillips et al., 2010

ஒற்றைத்தாடை அட்டை அல்லது ரி.ரெக்ஸ் அட்டை (Tyrannobdella rex) குருதி உறிஞ்சும் அட்டை இனத்தைச் சேர்ந்த மற்றைய அட்டை இனங்களைப் போலல்லாது ஒற்றைத்தாடையுடன் காணப்படும் அட்டை இனமாகும். மனிதன் உட்பட பாலூட்டி விலங்குகளின் சீதமென்சவ்வுப் பகுதிகளில் குருதியை உறிஞ்சும், குறிப்பாக மூக்குக்குள் சென்று வசிக்கும் இயல்பு கொண்டது. இவ்வினம் எட்டுப் பல்லைக் கொண்டது. இது தென்னமெரிக்காவில் பேரு நாட்டின் அமேசன் பகுதியில் குளித்த சிறுமியின் மூக்கிலிருந்து 2010-இல் கண்டுபிடிக்கப்பட்டது.[1][2]

அமைப்பு[தொகு]

வேறு அட்டை இனங்களில் இரண்டு அல்லது மூன்று தாடைகளும் அவற்றில் இரண்டு அல்லது மூன்று வரிசையில் பற்களும் அமைந்திருக்கும், ஆனால் ரி.ரெக்ஸ் அட்டையில் ஒற்றைத்தாடையைக் கொண்டுள்ளதால் ஒரே வரிசையில் பற்களைக் கொண்டுள்ளன. இவற்றில் மற்றைய அட்டை இனங்களை விடப் பெரிய பற்கள் காணப்படுகின்றன. இத்தகைய சிறப்பம்சங்களால் பட்டியலில் அடக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை[தொகு]

மற்றைய அட்டை இனங்களோ குருதி உணவைப் பெற்றுக்கொண்டதும் அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்கின்றன, ஆனால் இவை பாலூட்டிகளின் சீதமென்சவ்வுப் பகுதிகளில் தங்கி இருந்து உணவைப் பெறுவதோடு அங்கேயே தங்கி இருந்துவிடுகின்றன. இவை பாலூட்டிகளின் மூக்கு, வாய், தொண்டைப் பகுதிகளை விரும்புகின்றன. இவை மூக்கிற்குள் வசிக்கும் பொழுது குறிப்பிட்ட மாந்தருக்குக் கடும் தலைவலி ஏற்படும்.

பெயரீடு[தொகு]

இவற்றின் பெரிய பற்கள் டைரனொசோரசு (Tyrannosaurus rex) எனும் டைனசோரை நினைவுகூர்வதால் Tyranobdella எனும் புதிய பேரினம் உருவாக்கப்பட்டது. Tyrannobdella rex எனும் பெயர் பிலிப்சு என்பவரால் வைக்கப்பட்டது; Tyrannobdella: tyrannos (கிரேக்கம்.) – ‘‘கொடுங்கோல்’’ + bdella (கிரேக்கம்.) – ‘‘அட்டை’’; rex: rex (கிரேக்கம்.) – ‘‘மன்னன்’’.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The new T. rex: A leech with an affinity for noses". PhysOrg.com. 14 April 2010.
  2. Phillips, Anna J.; Arauco-Brown, Renzo; Oceguera-Figueroa, Alejandro; Gomez, Gloria P.; Beltrán, María A.; Lai, Yi-Te; Siddall, Mark E. (April 2010). "Tyrannobdella rex N. Gen. N. Sp. and the Evolutionary Origins of Mucosal Leech Infestations". PLoS ONE 5 (4): e10057. doi:10.1371/journal.pone.0010057. பப்மெட்:20418947. Bibcode: 2010PLoSO...510057P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றைத்தாடை_அட்டை&oldid=3889623" இலிருந்து மீள்விக்கப்பட்டது