ஒரு தளப்படுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு தளப்படுதல் (Polarisation) (ஒளியியல்) என்பது துருவகரணம் என்றும் அறியப்படும். ஒளி அலைகள் அவைகள் பரவும் திசைக்குச் செங்குத்தான தளத்தில் அதிர்கின்றன. இவ்வதிர்வுகள் ஒரே தளத்தில் இல்லாமல் பல தளங்களிலும் நிகழ்கின்றன. இத்தகு ஒளி அலைகள் சில படிகங்களின் (டூர்மலின்) வழியாகச் செல்லும் போது அதன் அதிர்வுகள் ஒரு தளத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது ஒருதளப்படுதல் எனப்படும். இப்போது ஒளி அலைகளின் அதிர்வுத் தளமும் துருவகரணத் தளமும் ஒன்றிற்கொன்று செங்குத்தாக இருக்கும்.

ஆதாரம்[தொகு]

  • Dictionary of Scicence-English Language book society
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_தளப்படுதல்&oldid=2056592" இலிருந்து மீள்விக்கப்பட்டது