ஒருநிலக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்று உலகில் உள்ள எல்லாக் கண்டங்களும் , தரைநிலப்பகுதிகளும் தொடர்பறா ஒருநிலமாக சேர்ந்து ஒன்றாக இருந்ததென அறிஞர்கள் கருதுகிறார்கள். இதற்கு ஒருநிலக் கொள்கை அல்லது ஒருதரைக் கொள்கை என்று பெயர். அப்படி இருந்த காலம் இன்றைக்கு ஏறத்தாழ 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும்

ஒருநிலக் கொள்கை அல்லது ஒருதரைக் கொள்கை என்பது ஏறத்தாழ 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்று உலகில் உள்ள எல்லாக் கண்டங்களும், தரைநிலப்பகுதிகளும் தொடர்பறா ஒருபெரு நிலமாக சேர்ந்து ஒன்றாக இருந்ததெனக் கொள்ளும் கொள்கை ஆகும். இந்த ஒருபெரும் தரைநிலத்தைச் சூழ்ந்து ஒரேயொரு மாபெரும் கடல் மட்டும்தான் இருந்தது. எனவே அன்றைய நில உருண்டையில், ஒரேயொரு தரைநிலமும், ஒரேயொரு பெருங்கடலும்தான் இருந்தது என்று இக் கொள்கை கூறுகின்றது.

மண் நிலம் எல்லாம் என்னும் பொருள் பட கிரேக்க மொழியின் Παγγαία (பான் 'கையா, pangaea) என்னும் சொல்லை இம்மாபெரும் ஒரு கண்டத்துக்கு ஆல்ஃவிரட் வேகனர் (Alfred Wegener) என்னும் ஜெர்மன் நாட்டுக்காரர் 1920களில் இட்டார். இந்த ஒருநிலத்தைத் தமிழில் முழுமண் என்று அழைக்கப்படும். இந்த முழுமண்ணைச் சூழ்ந்திருந்த மாபெரும் ஒருபெருங்கடலுக்கு முழுக்கடல் அல்லது முழுஆழி (Panthalassa) என்று பெயர். முழுமண்ணானது பிறைநிலா வடிவில் அமைந்திருந்தது. இக்கருத்தினைப் படத்தில் காணலாம். பின்னர் நில உருண்டையின் புற ஓடுகள் பிரிந்து பல்வேறு கண்டகளாக ஆனதை கருத்துருவாக அசையும் படமாகக் கீழே காணலாம்.

முழுமண்ணிலில் இருந்து நில ஓடுகள் பிரிந்து நகர்ந்து வெவ்வேறு கண்டங்களாக இன்றுள்ளது போல் மாறியதை அசையும் படமாகக் காட்டுகின்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருநிலக்_கொள்கை&oldid=3108836" இலிருந்து மீள்விக்கப்பட்டது