உமர் அல்-பஷீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒமர் அல் பஷீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உமர் ஹசன் அஹ்மத் அல்-பஷீர்
عمر حسن احمد البشير


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜூன் 30 1989
உதவி தலைவர் சல்வா கீர் மயர்டித்
முன்னவர் அஹ்மத் அல்-மிர்கானி
அரசியல் கட்சி தேசிய காங்கிரஸ்

பிறப்பு 1 ஜனவரி 1944 (1944-01-01) (அகவை 70)
ஹோஷ் பனாகா, சூடான்
வாழ்க்கைத்
துணை
ஃபத்மா கல்தீத்
சமயம் இஸ்லாம்


உமர் ஹசன் அஹ்மத் அல்-பஷீர் (அரபு மொழி:عمر حسن احمد البشير) சூடான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார்.

எகிப்து இராணுவ அகாடமியில் படித்து 1973இல் எகிப்து இராணுவத்தை சேர்ந்தார். 1980களில் திரும்பி சூடானுக்கு வந்து சூடான் இராணுவத்தில் தளபதியாக இருந்தார். 1989இல் இராணுவ புரட்சி மூலத்தில் முன்னாள் பிரதமர் சித்தீக் அல்-மஹ்தியை வெளியேற்றி பதவியில் ஏறினார். இந்த புதிய இராணுவ அரசு ஷரியாவை பொறுத்து சட்டங்களை மாற்றினார். தேசிய விமோசனத்துக்கு புரட்சி ஆணை சபையின் தலைவர் என்ற புதிய பதவியை படைத்து இதன் மூலம் பிரதமர், இராணுவத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர், நாட்டுத் தலைவர் ஆகிய பதவிகளில் ஏறினார்.

19 ஆண்டுகளாக நடந்த இரண்டாம் சூடானியப் போர் காலத்தில் இவர் பிரதமராக இருந்தார். இந்தப் போர் முடிந்து 2003இல் தார்ஃபூர் பிரச்சினை தொடங்கியுள்ளது. இப்பிரச்சனையில் ஜஞ்சவீட் படை மேற்கு சூடானில் இருக்கும் மக்களை வன்கலவி மற்றும் கொலை செய்யப்பட்டுள்ளது. இந்தப் படையுக்கு சூடானிய அரசு நிதியுதவி செய்கிறது என்று பல நாடுகள் ஓமார் அல்-பஷீரை குற்றம் சாட்டியுள்ளன.

ஜூலை 14, 2008 பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் அல்-பஷீர் மேல் கைது ஆணைப்பத்திரத்தை வெளியிட்டுள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உமர்_அல்-பஷீர்&oldid=1508013" இருந்து மீள்விக்கப்பட்டது