ஒத்துணர்வு மந்திரம்
|
இக் கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அருள் கூர்ந்து, நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும். |
ஒத்துணர்வு மந்திரம் (Sympathetic magic) அல்லது போலச்செய்தல் மந்திரம் என்பது போலச்செய்தல், தொடர்பு என்பவற்றின் அடிப்படையில் உருவான ஒத்திருத்தல் விதி, தொடர்பு விதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒருவகை மந்திரம் (magic) ஆகும். ஒத்திருத்தல் விதியில், மனிதரின் சூழலையோ அல்லது சிலசமயங்களில் மனிதரையோ பாதிப்பதற்கு போலியுருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்பு விதி ஒன்றை அதனோடு தொடர்புடைய இன்னொன்றை அடிப்படையாகக் கொண்டு செல்வாக்குக்கு உட்படுத்தலாம் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கண், காது போன்ற உறுப்புக்களில் ஏற்படும் நோய் குணமாவதற்காக அவ்வுறுப்புக்களின் உருவத்தை பொன், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்து கோயில்களுக்குக் கொடுப்பதாக நேர்த்தி வைப்பதுண்டு. இது போலச் செய்தல் விதிக்கு உட்பட்டது. இதுபோன்றே கன்று ஈன்ற கால்நடைகளிள் இளங்கொடிகளை பால்மரங்களில் கட்டிவிடும் வழக்கம் உண்டு. இது பால் மரங்களில் கட்டுவதால் கால்நடைகள் நிறைந்த பால் கொடுக்கும் என்னும் எண்ணத்தின் பாற்பட்டது. எனவே இது தொடர்பு விதியோடு சம்பந்தப்பட்டது ஆகும். மேலே கண்ட இரண்டு எடுத்துக் காட்டுகளும் ஒத்துணர்வு மந்திர வகையைச் சார்ந்தவை.