உதுமானியப் பேரரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒட்டோமான் இராச்சியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உதுமானியப் பேரரசு (ஒட்டோமான் பேரரசு, Ottoman Empire, 1299–1922, துருக்கி: Osmanlı Devleti அல்லது Osmanlı İmparatorluğu) என்பது பல்லின, பல் மத துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது துருக்கியப் பேரரசு எனவும் அழைக்கப்படுகிறது.
இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது (16ம் – 17ம் நூற்றாண்டுகளில்), இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் மேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஆஸ்திரியா, சிலவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யேமன் வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது.
வெளி இணைப்புகள் [தொகு]