அக்டோபர் 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒக்டோபர் 8 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 8 கிரிகோரியன் ஆண்டின் 281வது நாளாகும். நெட்டாண்டுகளில் 282வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1573 - எண்பதாண்டுகள் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை ஸ்பெயினுக்கெதிராக முதலாவது வெற்றியைப் பெற்றது.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தினர்.
- 1871 - சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1895 - கொரியாவின் கடைசி அரசி ஜோசியனின் மின் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டாள்.
- 1912 - முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ துருக்கியுடன் போர் தொடுத்தது.
- 1918 - இரண்டாம் உலகப் போர் - பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் "அல்வின் யோர்க்" தனியாளாக 25 ஜெர்மனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.
- 1932 - இந்திய விமானப் படை நிறுவப்பட்டது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.
- 1952 - லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
- 1967 - கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர்.
- 1973 - சூயஸ் கால்வாயின் இஸ்ரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இஸ்ரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.
- 1982 - சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.
- 1987 - விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1990 - ஜெருசலேமில் இஸ்ரேலியக் காவல்துறையினர் மசூதி ஒன்றைத் தாக்கியதில் 17 பாலஸ்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- 2001 - இத்தாலியின் மிலான் நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - 03:50 UTCக்கு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.
- 2006 - காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1971 - பா. ராகவன், தமிழக எழுத்தாளர்
இறப்புகள் [தொகு]
- 1992 - வில்லி பிரான்ட், ஜெர்மனி நாட்டு அதிபர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913).
- 1959 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930)
- 2003 - வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
சிறப்பு நாள் [தொகு]
- குரொவேசியா - விடுதலை நாள்
- ஐக்கிய அமெரிக்கா - கொலம்பஸ் நாள்
- இந்தியா - விமானப் படை நாள்