அக்டோபர் 24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒக்டோபர் 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 24 கிரிகோரியன் ஆண்டின் 297வது நாளாகும். நெட்டாண்டுகளில் 298வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1260 - சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது.
- 1260 - எகிப்திய சுல்தான் சாயிஃப் ஆட்-டின் குத்தூஸ், பாய்பேர்ஸ் என்பவனால் கொலை செய்யப்பட்டான். பாய்பேர்ஸ் நாட்டின் சுல்தான் ஆனான்.
- 1795 - போலந்து-லித்துவேனியன் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, பிரஷ்யா, மற்றும் ரஷ்யா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
- 1801 - மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
- 1806 - பிரெஞ்சுப் படைகள் பெர்லின் நகரை அடைந்தன.
- 1851 - யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது.
- 1857 - உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் காற்பந்தாட்ட அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1912 - முதலாம் பால்க்கன் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் சேர்பியா வெற்றி பெற்றது.
- 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது.
- 1930 - பிரேசிலில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. அதிபர் "லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா" பதவியுல் இருந்து அகற்றப்பட்டார்.
- 1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.
- 1935 - இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.
- 1945 - ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1960 - சோவியத் ஒன்றியத்தின் பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
- 1964 - வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.
- 1973 - யோம் கிப்பூர் போர் முடிவுக்கு வந்தது.
- 1994 - கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 - கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
- 2007 - சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1957 - இ. ஜெயராஜ், இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்
- 1971 - மல்லிகா செராவத், இந்திய நடிகை
- 1983 - தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
இறப்புகள் [தொகு]
- 1601 - டைக்கோ பிரா, டேனிய வானியலாளர் (பி. 1546)
- 1870 - அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய, ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (பி. 1807)
- 1972 - ஜாக்கி ராபின்சன், அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் (பி. 1919)
- 2005 - றோசா பாக்ஸ், ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர் (பி. 1913)
சிறப்பு நாள் [தொகு]
- சாம்பியா - விடுதலை நாள் (1964)
- ஐக்கிய நாடுகள் நாள் (1945)