ஐந்திறம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இக் கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அருள் கூர்ந்து, நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும். |
ஐந்திறம் என்பது குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் என்பவர் எழுதிய கட்டிடக்கலை நூலாக அறியப்படுகிறது. இதை கணபதி (சிற்பி) என்றவர் மீளுருவாக்கி 1986ல் வெளியிட்டார். இதை சடைச்சங்க காலமான கி.மு. 10,000த்தின் போது எழுதியிருக்கலாம்.
பொருளடக்கம் |
பெயர்க்காரணம் [தொகு]
ஐந்திரம் = ஐந்து கூறுகளை மூலமாக கொண்ட நூல். அந்த ஐந்து கூறுகள்,
- மூலம்
- சீலம்
- காலம்
- கோலம்
- ஞாலம்
31 கொள்கைகள் [தொகு]
மூலக்கட்டுரை : மய அறிவியல்
- பரவெளியில் எப்பொருளும் படைக்கப்படவில்லை. அனைத்தும் ஒரு மூலப்பொருளின் தோற்ற வெளிப்பாடே.
- அம்மூல சக்தியே சில நேரங்களில் ஆதிமூலம் எனவும், பிரம்மன் (குவையப் புலக்கோட்பாடு) எனவும் அழைக்கப்படுகிறது.
- இம்மூல சக்தியே தன்னை வெளிப்படு தோற்ற இயல்புக்கேற்ப அழகாக தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது. இச்சக்தி தான் வெளிப்படும் இடம், தோற்றம், காரணம் மற்றும் இயல்புக்கேற்ப தன்னை வெவ்வேறு பொருட்களாக தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது.
- இந்த தோற்ற ஆதாரமே மூலமென்றும், மையமென்றும், புள்ளியென்றும் அறியப்படுகிறது.
- இயற்கையில் உள்ள பொருடகள் அனைத்தும் சக்தியும் பொருட்களும் ஒன்றிணைந்த தோற்றமே.
- கட்டற்ற அண்டவெளி என்பது சக்தியும் பொருளும் இணைந்த களத்தோற்றமாகவும், அண்டத்திலுள்ள அனைத்து பொருட்களுக்கும் மூலமாய் அமைகிறது.
- ஒம் என்ற பிரணவமே பார்வையில் ஒளியாகவும், செவிப்புலன்களில் ஒலியாகவும் பரிணமிக்கிறது.
- இவ்வண்டத்தின் பொருள் தோற்றம் அனைத்தும் இசையின் தோற்றமாகவோ, மாதிரியாகவோ, உருவமாகவோ அல்லது இசையின் அளவுகோளில் உள்ள வேறு வெளிப்பாடுகளினாலோ ஆனவை.
- காலமே தான் படைத்தவற்றை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறது.
- உருவமற்ற பிரம்மத்தின் முதல் தோற்ற வெளிப்பாடு சதுரமாகும்.
- இந்த ஆதி சதுர தோற்றமே உள்ளார்ந்த ஆற்றலின் வரைபடமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதையே வாஸ்து புருச மண்டலம் என்கின்றனர்.
- பரவெளி கனசதுர அணுசக்திகளால் ஆனது. அவையே இவ்வண்டத்தின் கட்டடக்கண்டமாகும்.
- அந்த கனசதுரமே சிற்றவை(சிற்றம்பலம்) எனப்படும்.
- இச்சிற்றவையில் உள்ள செங்குத்தான ஒளிவீசும் பகுதியே ஒளி நூல் ஆகும். இதையே வடமொழியில் பிரம்மசூத்திரம் என்கின்றனர்.
- இவ்வொளிநூலே மூலத்தூண் எனவும் மூலஸ்தம்பம் எனவும் கொள்ளப்படுகிறது.
- இவ்வொளி நூல் ஒரு குறிப்பிட்ட தாளத்தில் அதிர்கிறது. இவ்வதிர்வுகளே இயற்கையின் ஒழுங்காக அமைகிறது.
- இவ்வதிர்வுகளையே சிவ தாண்டவம் இவ்வண்டத்தில் வெளிப்படுத்துகிறது.
- கனசதுர அனுக்களின் மூலக்கூறான சிற்றாகாசமே விண்வேளியின் கருவாகும்.
- சிற்றாகாசம் என்பது ஒலிக்கும் ஒளிக்கும் உண்டான கலப்பு.
- பரவெளி என்பதே ஒளியாகவும், அவ்வொளியே அண்டப்பொருட்களுக்கு மூலமாகவும் இருக்கிறது. இவ்வொளியை நுண்பொருள் என தமிழிலும் பிரம்மம் என வடமொழியிலும் கூறுகின்றனர்.
- இந்நுண்பொருளே ஆற்றல் என்னும் பிரம்மமாகவும், இப்பிரம்மமே மூடப்பட்ட வெளிகளில் உயிர் சக்தியாகவும் இருக்கிறது.(இம்மூடப்பட்ட வெளி என்பது உயிரினம், கட்டிடம், அண்டம் என அனைத்து இயங்கு பொருட்களுக்கும் பொருந்தும்)
- கட்டிடக்கலையே கணக்கியலின் உச்சம்.
- கட்டற்ற காலத்தின் இயக்கமே கணக்கியலின் மூலம்.
- பரவெளியின் அதிர்வே காலம்.
- பரவெளியும் காலமும் ஒன்றே.
- காலம் என்பது பரவெளியின் ஒரு நுட்பமான வெளிப்பாடு.
- காலமே அண்டப்பொருட்கள் அனைத்துக்கும் மூலக்கூறு.
- சிற்றாகாசமே பேராகாசத்தின் முழு அடையாளம்.
- பரவெளி தன்னை பெளிப்படுத்த ஒவ்வொரு கணமும் துடிக்கிறது.
- ஒரு சிற்பியானவன் தன் உள்மன சக்தியை கொண்டு ஒம் என்ற பிரணவத்தை சிற்றாகாசத்திலும் பேராகாசத்திலும் ஒலியாகவும் ஒளியாகவும் உணரத்தெரிந்திருக்க வேண்டும்.
- தன் அகயியக்கத்தை அறியாமல் எவராலும் புறவெளியின் இயக்கத்தை அறிய முடியாது.
மேற்கோள்கள் [தொகு]
- The Aintiram and,
- Pranava Veda, www.aumscience.com
- Free Space in Mayonic Science: A Tradition of Free Knowledge - Dr. V. Sivanandan Achari