ஐசோபிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐசோபிரீன்
Isoprene.svg
Isoprene-3d.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 78-79-5
பப்கெம் 6557
KEGG C16521
ChEBI CHEBI:35194
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C5H8
மோலார் நிறை 68.12 g/mol
அடர்த்தி 0.681 g/cm³
உருகுநிலை

−143.95 °C

கொதிநிலை

34.067 °C

வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

CH2=C(CH3)CH=CH2 என்ற மூலக்கூற்றுச் சூத்திரத்தையுடைய ஒரு சேதனச் சேர்மமே ஐசோபிரீன் ஆகும். இது தாவரங்களால் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இலகுவாக ஆவியாகக்கூடிய ஒரு திரவமாகும். இது தனியே ஐதரசனையும் கரிமத்தையும் மாத்திரம் கொண்டிருப்பதால் இது ஒரு ஐதரோகார்பனுமாகும்.

இயற்கையில் ஐசோபிரீன்[தொகு]

இறப்பரின் (பொலி ஐசோபிரீன்) ஒருபகுதியம் ஐசோபிரீனாகும். ஐசோபிரீன் பல தாவரங்களாலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் 600 மில்லியன் தொன் ஐசோபிரீன் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றது. வளிமண்டலத்துக்குள் வெளியிடப்படும் ஐதரோகார்பன் அளவில் மூன்றிலொரு பகுதி ஐசோபிரீனிலிருந்து வருகின்றது. வளிமண்டலத்தில் ஐசோபிரீன் இலகுவாகப் பிரிகையடைந்து விடும். ஐசோபிரீன் வளியில் தாக்கமடையும் போது வளியில் புகைமூட்டமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. யூக்கலிப்டஸ் போன்ற தாவரங்களால் ஐசோபிரீன் அதிகம் உருவாக்கப்படுகின்றது. வளியில் ஓசோன் வாயுவின் செறிவை ஐசோபிரீன் பாதிக்கும் தன்மையுடையது. எனினும் இது படை மண்டல ஓசோனில் தாக்கம் செலுத்தாது. சாதாரண வளியில் ஐசோபிரீன் கலக்கப்பட்டால் ஓசோனின் அளவை இது குறைக்கின்றது. நைதரசனின் ஒக்சைட்டுகள் (NOx) வளியில் காணப்பட்டால் ஐசோபிரீன் அதனோடு தாக்கமடைந்து ஓசோனை விடுவிக்கின்றது. எனினும் ஐசோபிரீன் இயற்கையான பொருளாகையால் அது ஒரு வளி மாசாகக் கருதப்படுவதில்லை. எனினும் NOx ஒரு வளி மாசாகும்.

தாவரங்களில் ஐசோபிரீன்[தொகு]

தாவரங்கள் தமது பச்சையுருமணிகள் மூலம் ஐசோபிரீனை உற்பத்தி செய்கின்றன. இது MEP வழிமுறை மூலம் உற்பத்தியாக்கப்படுகின்றன. பச்சையுருமணியில் ஐசோபிரீன் தொகுப்பி மூலம் இது உருவாக்கப்படுவதுடன் ஃபொஸிமிடோமைசின் மூலம் இவ்வுற்பத்தி நிறுத்தப்படுகின்றது. ஐசோபிரீன் 40 °C வெப்பநிலையிலேயே வினைத்திறனுடன் உற்பத்தி செய்யப்படுகின்றது. இத்தொழிற்பாடே ஐசோபிரீன் தாவரங்களை அதிக வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கின்றது என்ற அனுமானத்துக்குக் காரணமாகும்.

தாவரங்களுக்குப் பயன்படும் விதம்[தொகு]

அதிக வெப்பநிலையிலிருந்து தம்மைப் பாதுகாக்கத் தாவரங்கள் ஐசோபிரீனை உருவாக்குகின்றன. எனினும் 40 °Cக்கு மேற்பட்ட வெப்பநிலையிலிருந்து ஐசோபிரீனால் வினைத்திறனாக தாவரங்களினைப் பாதுகாக்க இயலாது. தாவரத்தினுள் அதிக வெப்பநிலை வீச்சை ஐசோபிரீன் தடுக்கின்றது. அணு ஒக்சிசன், ஓசோன் போன்ற அதிக தாக்குதிறனுடைய ஒக்சிசன் வகைகளிலிருந்து இது தாவரங்களைப் இரசாயன ரீதியில் பாதுகாப்பதாக அறியப்பட்டுள்ளது.

தொழிற்சாலை உற்பத்தி[தொகு]

இறப்பர்-பொலி ஐசோபிரீனின் இரசாயன கட்டமைப்பு.

இறப்பரிலிருந்தே முதன் முதலாகப் பிரித்தெடுக்கப்பட்டது. இறப்பரை ஒக்சிசனற்ற சூழ்நிலையில் அதிக வெப்பநிலைக்குட்படுத்துவதன் மூலம் ஐசோபிரீனைப் பிரித்தெடுக்கலாம். எத்திலீன் உற்பத்தியில் பக்க விளைபொருளாக ஐசோபிரீன் உருவாகின்றது. ஒவ்வொரு வருடமும் 800000 தொன் ஐசோபிரீன் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஐசோபிரீன் பிரதானமாக செயற்கை இறப்பரை உருவாக்கவே பயன்படுத்தப்படுகின்றது. இறப்பரானது ஒரு இலட்சம் தொடக்கம் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மூலக்கூற்றுத் திணிவுடைய ஐசோபிரீனாலான மிகப் பெரும் நீண்ட பல்பகுதியமாகும். இரசாயன ரீதியாக இறப்பர் ஒரு பொலி-ஐசோபிரீனாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோபிரீன்&oldid=1614538" இருந்து மீள்விக்கப்பட்டது