ஐக்கிய அமெரிக்காவின் பொதுவிலுள்ள இயற்றுச் சட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்காவின் பொதுவிலுள்ள இயற்றுச் சட்டங்கள்
United States Statutes at Large
தொகுதி 125இன் தலைப்புப் பக்கம்
வகைஅமர்வுச் சட்டங்கள், அரசிதழ் மற்றும் உடன்படிக்கைகள்
வெளியீட்டாளர்கூட்டரசு பதிவேடு அலுவலகம்
நிறுவியது1845 (1845)
மொழிஆங்கிலம்
தலைமையகம்ஐக்கிய அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்காவின் பொதுவிலுள்ள இயற்றுச் சட்டங்கள் (United States Statutes at Large) அல்லது பரவலாக பொதுவிலுள்ள இயற்றுச் சட்டங்கள் (Statutes at Large,சுருக்கமாக Stat.), ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டவாணைகள் மற்றும் உடன்நிகழ் தீர்மானங்களின் அலுவல்முறையான பதிவாகும். காங்கிரசின் ஒவ்வொரு சட்டவாணையும் தீர்மானமும் (சீட்டுச் சட்டங்கள்) பொதுச்சட்டம் (Pub.L.) என்றோ தனிச்சட்டம் (Pvt.L.) என்றோ பகுக்கப்பட்டு வரிசைப்படுத்தப்படுகின்றன. காங்கிரசின் அமர்வு முடிந்தபிறகு இவை பொதுவிலுள்ள சட்டங்கள் என அமர்வுப்படியும் வரிசை எண்படியும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.[1] கூட்டரசு இயற்றுச் சட்டங்கள் மூன்றங்கங்களாக வெளியிடப்படுகின்றன; சீட்டுச் சட்டங்கள், அமர்வுச் சட்டங்கள் (பொதுவிலுள்ள சட்டங்கள்), ஐக்கிய அமெரிக்க சட்டத்தொகுதி (United States Code) என்பனவாம்

மேற்சான்றுகள்[தொகு]

  1. Public and Private Laws: About, United States Government Printing Office, archived from the original on 2010-01-05, பார்க்கப்பட்ட நாள் 2009-11-20, At the end of each session of Congress, the slip laws are compiled into bound volumes called the Statutes at Large, and they are known as 'session laws.'