ஆ. பா. மு. இத்ரீசு
ஆதம் பாவா முகம்மது இத்ரீசு (ஏ. பி. எம். இத்ரீஸ்) ஒரு இலங்கை எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
ஆ. பா. மு. இத்ரீசு கிழக்கு மாகாணம் வாழைச்சேனையில் 1969 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். தாயின் பெயர் ஆயிசா பீவி. தாயின் தந்தை முகம்மது இப்றாகீம். அவரது தந்தை பெயர் இப்றாலெப்பை ஆதம் பாவா ஆலிம்.
தொடக்க, இடைநிலைக் கல்வியை வாழைச்சேனை அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற் கற்றார். உயர் கல்வியை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய்யாவில் 1993 இல் முடித்தார்.
[தொகு] எழுத்துப்பணி
இவரது கதை, கவிதை, நாடகம் என்று இவரது ஆக்கங்கள் 1980களில் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளிலும் இலங்கை வானொலியிலும் வெளிவந்தன. கட்டுரைகள், மெழிபெயர்ப்புகள், ஆய்வுகள் என பல படைப்புகள் பின்னர் வெளிவரத் தொடங்கின. இஸ்லாமிய சிந்தனை, அல்-ஜாமிஆ, மீள்பார்வை, அல்ஹஸனாத், மறுமொழி, சரிநிகர், எமதுதேசம் போன்ற சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. 1999 இல் ‘உயிர்ப்பைத்தேடும் வேர்கள்‘ என்ற பதிப்பகத்தை நிறுவினார்.
[தொகு] படைப்புகள்
[தொகு] தொகுப்புகள்
- கருத்துச் சுதந்திரம்– கட்டுரைத் தொகுதி (1996)
- இஸ்லாத்தில் சிறுவர் உளவியல் – உளவியல் கட்டுரைகள் (1998)
- சீறாவின் இயங்கியல் – ஆய்வு (2004)
- அதிகாரம் பற்றிய இரண்டு கண்ணோட்டங்கள் – (2005)
- அபாயகரமான வார்த்தை – உளவியல் கட்டுரைகள் (2006)
- சிந்தனைகள் எவ்வாறு பிறக்கின்றன – திறன்விருத்தி (2006)
- பேச்சும் தலைமைத்துவமும் – திறன்விருத்தி (2006)
- குழந்தைகளும் வாழ்வும் – உளவியல் கட்டுரைகள் (2011)
- சோனகத் தேசம்: மிகச் சுருக்கமான அறிமுகம் – வரலாறு (2011)
- இஸ்லாமிய இலக்கியம்: புத்துயிர்ப்பும் புரிதல்களும் – இலக்கியக் கோட்பாடு (2011)
- புன்னகைக்கும் நபிகள் – நபிகள் வரலாறு (2011)
- இஸ்லாமிய பாரம்பரிய அரங்கு– அரங்கியல் ஆய்வு (2011)
- அரசியல் என்ன பால் – நாடகத் தொகுப்பு (2011)
- உடைபடும் மௌனம் – பண்பாட்டு உரையாடல் (2011)
- சோனக அரங்கு – அரங்கியல் உரையாடல் (2011)
- குடிமைச் சமூகத்தை வலுவூட்டல் – அரசியல் உரையாடல் (2011)
[தொகு] மொழிபெயர்ப்பு
- உரையாடல் தொடர்கிறது – நேர்காணல் தெகுப்பு (2005)
- இருபதாம் நூற்றாண்டு: சிந்தனைகள், ஆளுமைகள், நிகழ்வுகள் – வரலாறு (2011)
[தொகு] பதிப்பித்தவை
- போர்க்காலப் பாடல்கள் – ஏ. ஜி. எம். ஸதக்கா (1998)
- காணாமல் போனவர்கள் – அஷ்ரஃப் சிஹாப்தீன் (1999)
- முக்காடு – வை. அஹ்மத் (2000)
- தரிசனங்கள், நிலவின் நிழலில் – வை. அஹ்மத் (2000)
- நவீனத்துவத்தின் தோல்வி – ரவூப் ஸெய்ன் (2002)
[தொகு] வெளி இணைப்புகள்
- ஏ. பி. எம். இத்ரீஸ் - எழுத்தாளரின் இணையத்தளம்
- பெருவெளி சஞ்சிகையில் இவரது உரை