ஏ. தேவராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. தேவராஜன் (பிறப்பு: சூன் 20 1967) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலாய் மொழி ஆசிரியரும், சிறந்த ஒவியருமாவார். மற்றும் "அருவி", "இலக்கியக் குரிசில்" ஆகிய இதழ்களில் துணைசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பல சிறுகதைகள், கட்டுரைகள், 2000த்துக்கு மேற்பட்ட புதுக் கவிதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. ஜெர்மனியிலிருந்து வரும் "பூவரசு", டென்மார்க்கிலிருந்து வரும் "இளைஞன்" இதழ்களிலும் இவரது எழுத்துக்கள் வெளிவந்துள்ளன.

நூல்கள்[தொகு]

  • "ஓர் ஆலய மௌனம்" (அச்சில்)

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • டத்தோ பத்மா இலக்கிய விருது (1994)
  • டான் ஸ்ரீ திநாகப்பன் இலக்கிய விருது (1998)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாதாந்தரப் பவுன் பரிசு (2000)

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._தேவராஜன்&oldid=3236688" இலிருந்து மீள்விக்கப்பட்டது