ஏழெயில் கதவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏழெயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏழெயில் கதவம் என்பது பாண்டிய நாட்டில் இருந்ததோர் கோட்டை.

சோழன் நலங்கிள்ளியைப் பாராட்டும் சங்ககாலப் புலவர் கோவூர் கிழார் நலங்கிள்ளி ஏழெயில் கதவத்தில் புலிக்கொடி பொறித்த செய்தி ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

ஏழெயிலில் வாழ்ந்த மக்களில் காடுவாழ் வேட்டுவர் மான்கறி கொண்டுவந்த வட்டி நிறையும்படியும், ஆய்ச்சியர் தயிர் கொண்டுவந்த தசும்பு நிறையும்படியும், அவ்வூரில் வாழ்ந்த உழத்தியர் அவ்வூர்க் குளத்துநீரில் விளைந்த வெண்ணெல்லை விலையாகத் தருவார்களாம். [1] இப்பாடலில் குளம் என்று குறிப்பிடப்படும் ஊர் பெருங்குளம் என்னும் ஊர் எனத் தெரியவருகிறது.

இதில் ஒன்றனுக்குள் ஒன்றாக அடுத்தடுத்து ஏழு பாதுகாப்புக் கோட்டைகளும் அவற்றிற்கான ஏழு வாயில்களும் இருந்தன.

  • எயில் = மதில்
  • கதவம் = கதவு

அடிக்குறிப்பு[தொகு]

  1. குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்
    முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
    தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்,
    ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின்
    பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
    – கோவூர்கிழார் புறம் 33
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழெயில்_கதவம்&oldid=1737383" இலிருந்து மீள்விக்கப்பட்டது