ஏறுதழுவல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏறுதழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பில் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு. அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் தை மாதத்தில் இடம்பெறும் ஏறுதழுவல் புகழ்பெற்றது.
பொருளடக்கம் |
[தொகு] ஏறுதழுவல் வரலாறு
[தொகு] கலித்தொகை
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்
[தொகு] சென்னை உயர் நீதிமன்ற தடையும் தமிழ்நாட்டு அரசின் மேன் முறையீடும்
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதி சில காலம் இந்த விளையாட்டுக்கு தடை விதித்தது. தமிழ்நாட்டு அரசின் தலையீட்டால் விலங்குகளை துன்புறுத்தாமலும் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பான முறையிலும் இந்த விளையாட்டு மீண்டும் நடைபெற அனுமதித்தது.