ஏர் பிரான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏர் பிரான்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏர் பிரான்சு (Air France), பாரிசின் வடபகுதியிலுள்ள டரெம்ப்லே-என்-பிரான்சைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை நிறுவனம் ஆகும். ஏர் பிரான்சு-கேஎல்எம் குழுமத்தின் துணை நிறுவனமாகவும், சிகாய் டீம் எனும் உலகளாவிய விமானச் சேவை கூட்டணியின் நிறுவன உறுப்பினராகவும் ஏர் பிரான்சு உள்ளது. 2013 ஆம் ஆண்டின்படி, ஏர் பிரான்சு நிறுவனம் பிரான்சு நாட்டில் 36 இலக்குகளுக்கும், 93 நாடுகளில் உள்ள 168 இலக்குகளுக்கும் (வெளிநாட்டு துறைகள் மற்றும் பிரான்சின் பிரதேசங்கள்) தங்களது விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. ஏர் பிரான்சு நிறுவனம், 2011 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 59,513,000 பயணிகளுக்கு பயணச்சேவை புரிந்துள்ளது.

அக்டோபர் 7, 1933 இல் ஏர் ஓரியன்ட், ஏர் யூனியன், காம்பாக்னி செனெரல் ஏரோபோசுடல், காம்பாக்னி இண்டர்நேசனல் டி நேவிகேசன் ஏரியன் மற்றும் சொசையட்டி செனரல் டி திரான்சுபோடு ஏரியன் ஆகியவற்றின் இணைப்பு நிறுவனமாக ஏர் பிரான்சு உருவானது.

1950 முதல் 1990 வரை பனிப்போரில் மூன்று முக்கிய கூட்டணி விமானச்சேவைகள் மட்டுமே மேற்கு பெரிலினில் இருந்து தெம்பெல்லோல்பு மற்றும் டிகெல் விமான நிலையங்களுக்கு செயல்பட்டன. அந்த மூன்று விமானச் சேவைகளில் ஏர் பிரான்சு நிறுவன விமானங்களும் ஒன்று.

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்[தொகு]

சிட்டிஜெட் மற்றும் எஃச்ஓபி ஆகிய துணை நிறுவனங்களுடனும் ஸ்கை டீமுடன் கூட்டணி பங்கீட்டினையும் பெற்றுள்ள ஏர் [பிரான்ஸ் நிறுவனம், சுமார் 24 நிறுவனங்களுக்கு மேலாக கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:[1]

  1. ஏர் ஆஸ்ட்ரல்
  2. ஏர் கொர்சிகா
  3. ஏர் மொரிஷியஸ்
  4. ஏர் செய்செல்லெஸ்
  5. ஏர் செர்பியா
  6. ஏர் டாஹிடி நுய்
  7. ஏர்பால்டிக்
  8. ஏர்கலின்
  9. அலஸ்கா ஏர்லைன்ஸ்
  10. ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ்
  11. அஸெர்பைஜியன் ஏர்லைன்ஸ்
  12. பாங்காக் ஏர்வேஸ்
  13. பல்கரியா ஏர்
  14. சலையர் ஏவியேஷன்
  15. க்ரோஅடிய ஏர்லைன்ஸ்
  16. எடிஹட் ஏர்வேஸ்
  17. பின்னையர்
  18. பிளைபி
  19. ஜார்ஜியன் ஏர்வேஸ்
  20. கோல் டிரான்ஸ்போர்ட்ஸ் ஏரோஸ்
  21. ஜப்பான் ஏர்லைன்ஸ்
  22. ஜெட் ஏர்வேஸ் [2]
  23. லுக்ஃஸைர்
  24. மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ்
  25. மான்டேனேக்ரோ ஏர்லைன்ஸ்
  26. ஸ்விஸ் ஏர்லைன்ஸ்
  27. TAAG ஆங்க்லோ ஏர்லைன்ஸ்
  28. உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸ்
  29. வெஸ்ட்ஜெட்

உயர்தர வழித்தடங்கள்[தொகு]

ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் உயர்தர வழித்தடங்களாக பாரிஸ் – டௌலௌஸ், டௌலௌஸ் – பாரிஸ், நைஸ் – பாரிஸ் மற்றும் பாரிஸ் – நைஸ் ஆகிய வழித்தடங்களின் விமானச் சேவைகள் உள்ளன. இந்த வழித்தடங்களில் முறையே வாரத்திற்கு 132, 123, 97 மற்றும் 88 விமானங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்துடன் மட்டுமல்லாது குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் விமானச் சேவை வழித்தடங்களாக, இக்னஸு பால்ஸ் – ரியோ டி ஜனேரியோ மற்றும் மான்ட்ரெல் – கல்கேரி ஆகியவை உள்ளன.[3]

விமானக் குழு வரலாறு[தொகு]

ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் இதற்கு முன்பு பணியாற்றிய விமானக் குழு பற்றிய பட்டியல்:[4]

Air France historical fleet
Aircraft Introduced Retired
Airbus A300 1974 1998
Airbus A310 1984 2002
Airbus A318 2003
Airbus A319 1997
Airbus A320-100 1988 2010
Airbus A320-200 1989
Airbus A321 1997
Airbus A330-200 2001
Airbus A340-200 1993 1999
Airbus A340-300 1993
Airbus A380-800 2009
Boeing 707–328 Intercontinental[5] 1959 1979
Boeing 707-328B[5] 1960 1982
Boeing 707-328C[5] 1960 1984
Boeing 727–200[6] 1968 1993
Boeing 737–200 1982 2002
Boeing 737–300 1991 2004
Boeing 737–500 1990 2007
Boeing 747–100 1970 2008
Boeing 747-200B 1977 2005
Boeing 747-200F 1974 2003
Boeing 747–300 1991 2007
Boeing 747-400 1991
Historical fleet (continued)
Aircraft Introduced Retired
Boeing 747-400BCF 2009
Boeing 767–200[7] 1991 1992
Boeing 767–300 1991 2003
Boeing 777-200ER 1998
Boeing 777F 2009
Boeing 777-300ER 2004
Breguet 763[8] 1949 1971
Concorde 1976 2003
Douglas DC-3[9] 1946 1962
Douglas DC-4[10] 1946 1971
Douglas DC-6[11] 1949 1968
Fokker F27[12] 1967 1997
Fokker 100 1997 1999
Lockheed L-1011 TriStar 1989 1991
Lockheed L-749 Constellation[13] 1947 1961
Lockheed L-1049G S. Constellation[14] 1953 1968
Lockheed L-1649A Starliner[15] 1957 1963
McDonnell Douglas DC-10-30 1992 1995
SNCASE Languedoc[16] 1945 1952
Sud Aviation SE 210 Caravelle[17] 1959 1981
Vickers Viscount 700[18] 1953 1968

பரவலான கலாச்சாரம்[தொகு]

கேன்ஸ் திரைப்பட விழாவின் அலுவலக ரீதியான விமானச் சேவையினை ஏர் பிரான்ஸ் புரிகிறது.[19]

குறிப்புகள்[தொகு]

  1. "About Air France Code-share agreements". Air France. Archived from the original on 17 நவம்பர் 2007.
  2. "Air France partners with Jet Airways".
  3. "Air France". cleartrip.com. Archived from the original on 2016-06-08.
  4. "Air France historic fleet at airfleets.ner. Retrieved". Airfleets.net.
  5. 5.0 5.1 5.2 "Photo ref B707". Airliners.net. 1 April 1969. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  6. "Photo ref B727-200". Airliners.net. 28 July 1968. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  7. "Photo ref 767-200". Airliners.net. 11 April 1992. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  8. "Photo ref Breguet 763". Airliners.net. 8 October 2004. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  9. "Photo ref DC-3". Airliners.net. 16 December 2006. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  10. "Photo ref DC-4". Airliners.net. 4 April 2001. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  11. "Photo ref DC-6". Airliners.net. 16 July 1994. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  12. "Photo ref F27". Airliners.net. 22 November 2008. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  13. "Photo ref L-749". Airliners.net. 18 December 2004. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  14. "Photo ref L-1049G". Airliners.net. 30 October 1966. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  15. "Photo ref L-1649". Airliners.net. 26 January 2001. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  16. "Photo ref SE 161". Airliners.net. 7 April 1952. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  17. "Photo ref Caravelle". Airliners.net. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  18. "Photo ref Viscount 700". Airliners.net. 30 March 1968. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  19. "About Air France". corporate.airfrance.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_பிரான்சு&oldid=3631002" இலிருந்து மீள்விக்கப்பட்டது