ஏர்னஸ்ட் கிளார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாமி ஏர்னஸ்ட் கிளார்க் நாராயணகுருவின் ஒரே ஒரு ஆங்கிலேயச் சீடர்.

வாழ்க்கை[தொகு]

லண்டன் அருகே பிறந்த ஏர்னஸ்ட் கிளார்க் பிரம்மஞான சங்க ஈடுபாடு காரணமாக இந்தியா வந்தார். அன்னி பெசண்டின் தொடர்பால் சென்னையில் தங்கியிருந்தார். திருவனந்தபுரம் வந்தபோது சுவாமி தர்ம தீர்த்தர் வழியாக நாராயணகுருவை அறிமுகம் செய்துகொண்டார். நாராயணகுருவை ஆசிரியராக ஏற்றுக்கொண்டு குருகுலத்திலேயே இருந்தார்

1927ல் கிளார்க் நாராயணகுரு கேட்டுக்கொண்டமைக்கிணங்க மாணவர்களும் ஆசிரியர்களும் வேளாண்மை செய்து பொருளீட்டி கல்விபயிலும் அமைப்பு ஒன்றை சிவகிரியில் உருவாக்கினார். இது பின்னர் காந்திக்கு முன்னுதாரணமாக அமைந்தது. குருகுலத்தில் அப்போதிருந்த கெ.எம்.ஜான் என்பவர் குருவுக்கும் கிளார்க்குக்குமான மொழிபெயர்ப்பாளராக இருந்தார். கிளார்க் அமைத்த ‘Sivagiri Free Industrial and Agricultural Gurukulam' என்ற திட்டம் 1928ல் நாராயணகுரு மரணமடைந்ததனால் நின்றுவிட்டது. குருகுல அரசியலால் மனம் வெறுத்த கிளார்க் அதைவிட்டு வெளியேறினார்.

1942ல் கிளார்க் தமிழ்நாட்டில் கோவையில் குடியேறினார். அங்கிருந்து ‘Life' என்ற ஆன்மீக தத்துவ இதழை வெளியிட்டார். அதில் நாராயணகுருவின் சிந்தனைகளை விரிவாக முன்வைத்தார். 1948ல் இங்கிலாந்து திரும்பிய கிளார்க் அங்கே மரணமடைந்தார்

பங்களிப்பு[தொகு]

கிளார்க் அவரது லைஃப் இதழில் எழுதிய கட்டுரைகளில் இருந்துதான் தர்மதீர்த்தர் அவரது மாபெரும் நூலான The prophet of peace க்கான கருத்துக்களை தொகுத்துக்கொண்டார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்னஸ்ட்_கிளார்க்&oldid=3858218" இலிருந்து மீள்விக்கப்பட்டது