ஏர்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏர்ட்சு அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு உலக முறை அலகாகும். நொடி-1 என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.

மின்காந்தவியலில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய செருமானிய இயற்பியலாளர் ஐன்ரிச் ஏர்ட்சை நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்