எ செபரேஷன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ செபரேஷன்
இயக்கம்அஸ்கஃர் ஃபர்ஹாதி
தயாரிப்புஅஸ்கஃர் ஃபர்ஹாதி
கதைஅஸ்கஃர் ஃபர்ஹாதி
இசைசாட்டர் ஓராகி
நடிப்புலெய்லா ஹாடாமி
பெய்மன் மோஆதி
ஷாகாப் ஹோசினி
சாரெ பயட்
சாரினா ஃபர்ஹாதி
ஒளிப்பதிவுமகமூத் கலரி
படத்தொகுப்புஹாயேத் சாஃபியாரி
கலையகம்அஸ்கஃர் ஃபர்ஹாதி தயாரிப்பு
விநியோகம்பிலிம்ஈரான் (Iran)
சோனி பிக்சர்ஸ் கிளாசிக்ஸ் (US)
வெளியீடுபெப்ரவரி 15, 2011 (2011-02-15)(Berlin)
16 மார்ச்சு 2011 (Iran)
ஓட்டம்123 நிமிடங்கள் [1]
நாடுஈரான்
மொழிபெர்சிய மொழி
ஆக்கச்செலவுஐஅ$800,000[2]
மொத்த வருவாய்ஈரான் $3,100,000
$22,774,527 (உலக அளவில்)

எ செபரேஷன் (பெர்சிய மொழியில்: جدایی نادر از سیمین‎ Jodái-e Náder az Simin, "The Separation of Nader from Simin") (ஆங்கிலம்: A Separation) 2011-ம் ஆண்டு பெர்சிய மொழியில் வெளிவந்த ஈரானிய திரைப்படம் ஆகும். அஸ்கஃர் ஃபர்ஹாதி எழுதி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் லெய்லா ஹாடாமி, பெய்மன் மோஆதி, ஷாகாப் ஹோசினி, சாரெ பயட் மற்றும் சாரினா ஃபர்ஹாதி போன்றோர் நடித்துள்ளனர். படத்தின் கதை ஒரு ஈரானிய நடுத்தர வர்க்க தம்பதியினரின் விவாகரத்து பிரிவு, கணவனின் அல்சைமர் நோயால் பாதித்த வயோதிக தந்தையைப் பார்த்துக்கொள்ள அவன் நியமிக்கும் ஒரு பணிப்பெண்ணினால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து போகிறது.

இப்படம் சிறந்த வெளிநாட்டுப்படத்திற்கான 2012 அகாடமி விருதை வென்றது, இதுவே இவ்விருதைப்பெறும் முதல் ஈரானிய படமாகும். மேலும் இது, 61-வது பெர்லின் உலக திரைப்படத் திருவிழாவில் சிறந்த படத்திற்கான கோல்டன் பியர்(Golden bear) விருதும், சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான சில்வர் பியர்(Silver bear) விருதும் வென்றுள்ளது. கோல்டன் பியர் விருது பெறும் முதல் ஈரானிய திரைப்படம் இதுதான்[3]. சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதையும் வென்றுள்ளது[4]. இத்திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான அகாடமி விருதிற்கும் முன்மொழியப்பட்டது; கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆங்கிலம் அல்லாத ஒரு படம் இந்தப் பகுப்பிற்கு(category) பரிந்துரைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.[5].

உசாத்துணைகள்[தொகு]

  1. "Nader and Simin, A Separation (PG)". British Board of Film Classification. 3 May 2011. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  2. "A Separation (2011) - Box office / business". ஐ.எம்.டி.பி இணையத்தளம். அமேசான்.காம். 25 March 2012. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
  3. "Iranian Film Takes Top Prize at Berlinale". பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 16, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Golden Globes: 'A Separation' wins best foreign language film". பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 16, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Oscar Nominations 2012: Full List". பார்க்கப்பட்ட நாள் ஃபிப்ரவரி 16, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_செபரேஷன்_(திரைப்படம்)&oldid=3850524" இலிருந்து மீள்விக்கப்பட்டது