எ. சகாதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எ. சகாதேவன் (பிறப்பு சூலை 23 1947) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் 'எ. மு. சகா' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ள இவர், கெடா மாநில எழுத்தாளர் வாசகர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் திகழ்கின்றார். அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

பணி[தொகு]

மலேசியக் கல்வி அமைச்சில் தமிழ்ப் பள்ளிகளுக்கான தலைமை அமைப்பாளராகப் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள இவர், தொடக்க, இடைநிலைப் பள்ளிகளுக்கான தமிழ்ப் பாடத்திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளார். மேலும், உலகத் தமிழாசிரியர் மலேசிய மாநாட்டின் செயலாளராகவும் (1994), ம. இ. கா. வின் கல்விக் குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1970 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை இவர் அதிகமாக எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. கெடா மாநில எழுத்தாளர் வாசகர் இயக்கத்தினூடாக "பட்டினிக் குருவி" என்னும் தொகுப்பினை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • பிபிடி PPT பட்டம் 2000
  • ஏஎம்என் AMN பட்டம் 2001

இவ்விரு பட்டங்களும் மலேசிய அரசாங்கத்தால் வழங்கப்படும் உயரிய பட்டங்களாகும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._சகாதேவன்&oldid=3235833" இலிருந்து மீள்விக்கப்பட்டது