எ-கலப்பை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழா எ-கலப்பை எனப்படும் மென்பொருள் ("எறும்புகள்" எனப்படும் அமைப்பின் கலப்பை அல்லது இலத்திரனியற் கலப்பை) தமிழர்களால் தமிழர்களுக்காக தமிழில் கணினியில் உள்ளீடு செய்யப் பயன்படும் ஒன்று. இது ஒருங்குறி மற்றும் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறைகளை ஆதரிக்கின்றது. இது கீழ்வரும் விசைப் பலகை அமைப்புக்களில் கிடைக்கின்றது
இம் மென்பொருள் விண்டோஸ் 98[1]2000/மில்லேனியம்/XP/2003[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] இயங்கவல்லது. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தை இது ஆதரிக்காது. [2]இயங்குதளங்களின் துணையின்றியே ஒருங்குறி (யுனிக்கோட்) முறையில் எழுதப்பட்ட ஆவணங்களை காட்டவல்தெனினும் இயங்குதளத்தினூடாக ஒருங்குறி ஆதரவை நிறுவினால் இச்சேவையைப் பெற்றுக் கொள்ளும். தமிழா எ-கலப்பையை ALT+2 (இவற்றை தேர்வுகள்(options) மூலம் மாற்றவியலும்) மூலம் தமிழுக்கும், பின்னர் ALT+2 மீண்டும் அழுத்துவதன் மூலம் ஆங்கிலத்திற்கும் வரமுடியும். இணையத்தில் மற்றும் கூகிள் டாக் மற்றும் விண்டோஸ் லைவ் மெசன்ஜர் தூதுவர்களூடாக இணைய உரையாடல்கள் செய்யமுடியும். தமிழா எ-கலப்பை மென்பொருளானது பதிவிறக்கம் செய்யக்கூடியது.
பொருளடக்கம் |
[தொகு] தொழில் நுட்பத் தகவல்கள்
தமிழா எ-கலப்பை தனித்தியங்க வல்லது. தமிழை ஒருங்குறி முறையில் உட்புகுத்த Alt+2 விசைகளைப் பயன்படுத்தவும். எனினும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் XP/2003/2007 பதிப்புக்களில் உள்ளீட்டு மொழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யும் என்பதால் கீழ்வரும் முறையைப் பின்பற்றவும். இது ஓப்பன் ஆபிஸிற்குத் தேவையற்றது.
[தொகு] விண்டோஸ் 2000
Start -> Settings -> Control Pannel -> Regional Options-> Input locals ->Add ->Input local Tamil and Keyboard layout UNICODE Tamil.
[தொகு] விண்டோஸ் XP/2003
- Click Add
- உள்ளீட்டு மொழியைத் தமிழாகவும் விசைப்பலகை அமைப்பை உங்களின் தேர்வுக்கேற்பத் தெரிவுசெய்யவும் Select (Input language as Tamil and keyboard layout based on your preference).
- தமிழில் ஒலியியல் முறையில் உள்ளீடு செய்பவர்கள் UNICODE Tamil அல்லது UniTamil என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தமிழ் 99 விசைப்பலகையைப் பாவிப்பவர்கள் உள்ளீட்டு மொழியாகத் தமிழையும் விசைப்பலகை அமைப்பை Tamil99Uni ஆகவும் தேர்ந்தெடுக்கவும். (Those who use Tamil99 keyboard add input Language as Tamil and Keyboard layout as Tamil99Uni)
- இப்பொழுது வேண்டிய மொழியைத் தேர்ந்தெடுத்து தட்டச்சுச் செய்யலாம். (Now you can click the language bar and make selection)
[தொகு] வெளியிணைப்புக்கள்
- தமிழா எ-கலப்பை பதிவிறக்கம்
- தமிழா எ-கலப்பை விண்டோஸ் ஐ நிறுவும்பொழுதே நிறுவக்கூடியதாக என்லைட் மென்பொருட்களுக்கெனெ உருவாக்கப்பட்ட பொதி.
- தமிழா எ-கலப்பை ஆங்கிலப் பக்கம்
- தமிழா விவாதக் குழு
- தமிழா
- எ-கலப்பை நிறுவல் உதவிக் குறிப்பு
[தொகு] உசாத்துணைகள்
- ↑ விண்டோஸ் 98 கணினிகளில் தமிழ் யூனிகோடில் எழுதுவது எப்படி? முகுந்தராஜின் கட்டுரை, அணுகப்பட்டது ஏப்ரல் 15, 2007
- ↑ [http://lists.thamizha.com/pipermail/freetamilcomputing_lists.thamizha.com/2008-November/000908.html எ-கலப்பை விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தை ஆதரிக்காது)

