எஸ். பி. மயில்வாகனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எஸ். பி. மயில்வாகனம் | |
| பிறப்பு | கொழும்பு, இலங்கை |
|---|---|
| இறப்பு | 1983 லண்டன் |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| பணி | ஒலிபரப்பாளர் |
| பணியகம் | இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் |
| அறியப்படுவது | வானொலி அறிவிப்பாளர் |
| சமயம் | இந்து |
| வாழ்க்கைத் துணை | செந்திமணி மயில்வாகனம் |
| பிள்ளைகள் | இரமணன், சசிதரன், யசோதா |
எஸ். பி. மயில்வாகனம் (இறப்பு: 1983) இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையின் முன்னோடி என்று கருதப்படுபவர். உலக ரீதியாக பலராலும் அறியப்பட்ட தமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார். தென்னிந்தியாவில் பொதுமக்கள் மத்தியிலும், சினிமா கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு உடையவராக விளங்கியவர்[1].
பொருளடக்கம் |
[தொகு] வானொலி அறிவிப்பாளராக
மயில்வாகனத்தின் மனைவி செந்திமணி இலங்கை வானொலியின் முதலாவது பெண் வானொலி செய்தி அறிவிப்பாளராக இருந்தவர். அவர் மூலமாகவே மயில்வாகனமும் இலங்கை வானொலிக்கு அறிமுகமானார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளிபோர்ட் டொட் என்பவர் கொழும்புத் திட்டம் மூலம் இலங்கை வானொலியில் பணியாற்றிய போது அவரிடம் பயிற்சி பெற்றார் மயில்வாகனம். இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் திருப்பிப்பார், ஜோடி மாற்றம், இருகுரலிசை, ஒருபடப்பாட்டு போன்ற பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார்.
[தொகு] சிறப்புத் தகவல்கள்
- நான் கண்ட சொர்க்கம் (1958) திரைப்படத்தில் சுவர்க்கக் காட்சி ஒன்றில் நகைச்சுவை நடிகர் கே. ஏ. தங்கவேலு ஏ, ரேடியோ சிலோன் மயில்வாகனம் இங்கேயும் வந்து விட்டாரா!, என்று குறிப்பிடுவார்..
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "When Ceylon ruled the airwaves". பார்த்த நாள் 2008-09-04.
[தொகு] உசாத்துணை
- Wavell, Stuart. - The Art of Radio - Training Manual written by the Director Training of the CBC. - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 1969.