எஸ். நடராஜன் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். நடராஜன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஆடற்கோ (இறப்பு: 8 செப்டம்பர் 2011) தமிழகத்தைச் சேர்ந்த கவிஞரும், இதழாசிரியரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

நடராஜன் சென்னையில் பின்னி ஆலையின் தலைமை அலுவலகத்தில் 45 ஆண்டுகள் பணியாற்றி, 1992 இல் ஓய்வுபெற்றார். சென்னை, பெருமாள்பேட்டையிலும் பின்னர் அம்பத்தூரிலும் வசித்தவர். இவருக்கு மகள்கள் மூவர்; மகன் ஒருவர்.

1997 காலகட்டத்தில் 'தேனாறு' என்ற கவிதை மாத இதழைத் தொடங்கி, அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். இதே ’தேனாறு’ என்ற தலைப்பில், தம் கவிதைகளைத் தொகுத்து, 2007 ஆம் ஆண்டு, நூலாக வெளியிட்டார். தமிழ்ப் பாவை என்ற நூலை 2010ஆம் ஆண்டு எழுதினார். இந்நூலை இலக்குவனார் இலக்கியப் பேரவை வெளியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நடராஜன்_(கவிஞர்)&oldid=3394436" இலிருந்து மீள்விக்கப்பட்டது