கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்தோனிய குரூன்
Eesti kroon |
 |
| குரூன் நாணயங்கள் |
|
| ISO 4217 குறியீடு |
EEK |
| புழங்கும் நாடு(கள்) |
எசுத்தோனியா |
| பணவீக்கம் |
2.8% |
| மூலம் |
ஐரோப்பிய மத்திய வங்கி, மே 2010 |
| ஐரோப்பிய பணமாற்று விகிதம் |
|
| துவக்கம் |
28 ஜூன் 2004 |
| நிலை விகிதம் துவக்கம் |
31 டிசம்பர் 1998 |
| 1 € = |
15.6466 குரூனி |
| பட்டை |
மாறுவதில்லை[1] |
| சிற்றலகு |
|
| 1/100 |
சென்ட் |
| புனைபெயர் |
காகிதம் (Paper) |
| பன்மை |
குரூனி |
| சென்ட் |
சென்டி |
| நாணயங்கள் |
|
| அதிக பயன்பாடு |
10, 20, 50 சென்டி, 1 குரூனி |
| அரிதான பயன்பாடு |
5 சென்டி, 5 குரூனி |
| வங்கித்தாள்கள் |
|
| அதிக பயன்பாடு |
2, 5, 10, 25, 100, 500 குரூனி |
| அரிதான பயன்பாடு |
1, 50 குரூனி |
| வழங்குரிமை |
எஸ்டோனிய வங்கி |
| வலைத்தளம் |
www.bankofestonia.info |
குரூன் (சின்னம்: kr or ,-; குறியீடு: EEK), எஸ்டோனியா நாட்டின் முன்னாள் நாணயம். குரோன் என்னும் சொல் லத்தீன் மொழியின் “குரோனா” என்னும் சொல்லில் இருந்து தொன்றியது. இதற்கு கிரீடம்/முடி என்று பொருள். டானிய குரோன், சுவீடிய குரோனா, நார்வே குரோன் போன்ற ஸ்கான்டினாவிய நாடுகளின் நாணயங்களின் பெயர்களும் இச்சொல்லிலிருந்தே தோன்றின. ஒரு குரூனில் நூறு சென்டிகள் உள்ளன. குரூன் என்ற சொல்லின் பன்மை வடிவம் “குரூனி”. எஸ்தோனிய குரூன் முதன் முதலில் 1928ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது எஸ்டோனியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் குரூன் நாணய முறை கைவிடப்பட்டு சோவியத் ரூபிள் நாணயம் புழக்கத்தில் இருந்தது. 1992ல் எஸ்டோனியா விடுதலை அடைந்தவுடன் குரூன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. எஸ்டோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டதால் ஜனவரி 1, 2011 முதல் குரூன் கைவிடப்பட்டது. அதற்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ எஸ்டோனியாவின் நாணயமாகிவிட்டது.[2][3]
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]