எவனோ ஒருவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Evano Oruvan
இயக்குனர் Nishikanth Kamat
தயாரிப்பாளர் Abbas-Mustan
K. Sera Sera
R. Madhavan
கதை R. Madhavan (dialogue)
நடிப்பு Madhavan
Sangeetha
Seeman
இசையமைப்பு P. Sameer
G. V. Prakash Kumar
விநியோகம் Leukos Films
Pyramid
வெளியீடு திசம்பர் 7, 2007 (2007-12-07)
நாடு India
மொழி Tamil

எவனோ ஒருவன் 2007 ல் நிஷிகாந்த் காமத் இயக்கிய தமிழ் திரைப்படம் . இதில் இயக்குனர் சீமான் ஒரு முக்கிய பாத்திரத்திலும், முன்னணி பாத்திரங்களில் மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ளனர். படத்தின் இசை பி.சமீர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல் வரிகள் நா.முத்துக்குமார்.

கதை[தொகு]

ஒரு சாதாரண மனிதனின் கதை இது. ஒரு அளவான குடுமபத்தின் தலைவன் ஸ்ரீதர் வாசுதேவன. அவன் மனைவி வத்சலா மற்றும் அவன் இரு குழந்தைகள். சாதாரண நடுத்தர வர்க்கம். அவன் செய்யும் ஒரே தவறு அவன் நேர்மை. நாம் என்ன இதிகாச காலத்திலேய வாழ்கின்றோம் எல்லோரும் நல்லவர்களாக இருப்பதற்கு??... நடைமுறை தெரியாத முட்டாள்.அவனின் நேர்மை எல்லோருக்கும் பிரச்சினையாய் இருக்கிறது.

கடையில் பொருள் வாங்கிவிட்டு கொடுக்கின்றப்பணத்திற்கு கணக்கு கேட்பது நம் சாதாரண உரிமை. அதற்காக அவன் நடத்தப்படும் விதம் புதிதில்லை. அவனின் உரிமையை மறுப்பது எவனோ ஒருவன் அல்ல நம் சக மனிதன்தான், கடைக்காரன். அவன் உரிமைக்கான போராட்டம் அவனின் சக மனிதர்களாலேயே அங்கீகரிக்கப்படவில்லை. அதற்கு நீங்களும் நானும் சேர்ந்து கொடுத்தப்பரிசு மரணம்.

இப்படத்தில் குறிப்பிட வேண்டியதில் ஒன்று இதன் வசனம் (நம் மாதவன் ). சிறந்த வசனங்கள். இப்படத்தில் வரும் ஒரு வசனம் சீமான் தன சக காவலரிடம் சொல்வதாக அமையும், "இவன மாதிரி ஆளுங்களெல்லாம் தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டா" என்று வரும். இதில் மாதவனின் உடல்மொழி( body language ) மிகவும் அருமை. நடுத்தர வர்கத்தின் இயலாமையையும் கோபத்தையையும் அருமையாக பிரதிபலித்திருப்பார்.

நாம் இங்கு உரிமைக்காக ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை, நம் உரிமையை கேட்ககூடமாட்டேன் என்கின்றோம். உரிமை மறுக்கப்படுவது பிரச்சினையில்லை. இயலாமைதான் இங்கு பிரச்சனை. நம் உரிமையை நாமே ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கின்றோம். நாகரீகம் என்பது அமைதியாகச செல்வதில் இல்லை , தங்கள் உரிமையை கேட்பதில்தான் இருக்கிறது என்பது எத்தனை மனிதனுக்கு தெரியும்.

நாம் எல்லோரும் சாக்கடையிலே வாழப்பழகிவிட்டோம் அதிலேயே அசிங்கம் செய்துகொண்டு... கேட்டால் அரசியல்வாதிகள் சரியில்லை அல்லது அதிகாரிகள் சரியில்லை என்பார்கள். பண்ணும் அசிங்கம் எல்லாம் நீயும் நானும் சேர்ந்து பண்ணுவது. என்னை இத படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை.. அது குற்றவுணர்வால இல்லை ஆத்திரமா என்று தெரியவில்லை.

பாடல்[தொகு]

படத்தில் ஒரே ஒரு இறுதி பாடல் "உனது எனது என்று உலகில் என்ன உள்ளது ???" என்ற நா.முத்துக்குமாரின் வரிகளில் படத்தின் முழு நோக்கத்தையும் அது கூறுகின்றது.

குறிப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எவனோ_ஒருவன்&oldid=1371439" இருந்து மீள்விக்கப்பட்டது