எல்லெசுமியர் தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எல்லெசுமியர் தீவு | |
|---|---|
| புவியியல் | |
| அமைவு | வட கனடா |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| தீவுக்கூட்டம் | குயீன் எலிசபெத் தீவுகள் |
| பரப்பளவு | 1,96,235 கிமீ2 (75 ச மைல்) |
| உயர் புள்ளி | பார்பீயூ கொடுமுடி (2,616 மீ (வார்ப்புரு:Convert/மீ)) |
| ஆட்சி | |
| ஆட்சிப்பகுதி | |
| பெரிய நகரம் | கிரிசே பியோர்ட் (141) |
| இனம் | |
| மக்கள் தொகை | 146 (2006) |
எல்லெசுமியர் தீவு கனடாவின் ஆட்சிப்பகுதியான நுனாவுத்தைச் சேர்ந்த கிக்கிக்தாலுக் பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகும். கனடாவின் ஆக்டிக் தீவுக்கூட்டங்களுக்குள் அடங்கிய இது, குயீன் எலிசபெத் தீவுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. 196,235 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத் தீவு உலகின் பத்தாவது பெரிய தீவும், கனடாவின் மூன்றாவது பெரிய தீவும் ஆகும். ஆர்க்கிட் மலைத்தொடர்த் தொகுதி எல்லெசுமியர் தீவின் பெரும்பகுதியை மூடியுள்ளது. இதனால் கனடாவின் ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களில் உள்ள தீவுகளில் கூடிய மலைப்பாங்கான தீவு இதுவாக உள்ளது. "ஆர்க்டிக் வில்லோ" எனப்படும் மரவகையே இத்தீவில் வளரும் ஒரே மரவகை ஆகும்.