எலும்புக் கொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலும்புக் கொடை அல்லது எலும்பு தானம் என்பது இயற்கையான மரணமடைந்தவர்கள் அல்லது மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் போன்றவர்களிடமிருந்து அவர்களுடைய உறவினர்களின் அனுமதியுடன் எலும்புகளைத் தானமாகப் பெறுவதாகும். இப்படி தானமாகப் பெறப்பட்ட எலும்புகள், எலும்பு பாதிப்புடையவர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான எலும்பு வங்கி உள்ள இடங்களில் தானமாகப் பெறப்பட்ட எலும்புகள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. எலும்புகள் பயன்பாட்டில் தானம் அளித்தவர், தானம் பெற்றவர் இருவரும் ஒரே இரத்தப் பிரிவு உடையவராக இருக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்புக்_கொடை&oldid=3715504" இலிருந்து மீள்விக்கப்பட்டது