எர்மன் கோரிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| எர்மன் வியெம் கோரிங் | |
|
தலைவர், ரெய்க் ஸ்டாக் பாராளுமன்றம்
|
|
|---|---|
| பதவியில் 1932 – 1945 |
|
| தலைவர் | பால் வோன் ஹைன்டன்பர்க் அடால்ப் இட்லர் |
| முன்னிருந்தவர் | பால் லோப் |
| பின்வந்தவர் | யாருமில்லை |
|
அமைச்சரவைத் தலைவர்,
தன்னாட்சிப் பெற்ற புருஷ்யா அமைச்சரவை |
|
| பதவியில் 10 ஏப்ரல் 1933 – 24 ஏப்ரல் 1945 |
|
| ஆளுநர் | அடால்ப் இட்லர் அவரே (Reichsstatthalter) |
| முன்னிருந்தவர் | பிரான்ஸ் வோன் பேப்பன் |
| பின்வந்தவர் | புருஷ்யா நீக்கப்பட்டது |
|
|
|
| பதவியில் 1935 – 1945 |
|
| பிரதமர் | அவரே |
| முன்னிருந்தவர் | அடால்ப் இட்லர் |
| பின்வந்தவர் | புருஷ்யா நீக்கப்பட்டது |
|
ரெய்க் அமைச்சரவை, வானூர்தித்துறை அமைச்சர்.
|
|
| பதவியில் ஏப்ரல் 1933 – ஏப்ரல் 1945 |
|
| தலைவர் | பால் வோன் ஹைன்டன்பர்க் அடால்ப் இட்லர் |
| முன்னிருந்தவர் | பதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது |
| பின்வந்தவர் | பதவி இல்லை |
|
ரெய்க் அமைச்சரவை,
வனத்துறை அமைச்சர். |
|
| பதவியில் ஜூலை 1934 – ஏப்ரல் 1945 |
|
| President | பால் வோன் ஹைன்டன்பர்க் அடால்ப் இட்லர் |
| முன்னிருந்தவர் | பதவி ஏற்றுக்கொள்ளப்பட்டது. |
| பின்வந்தவர் | பதவி இல்லை. |
| அரசியல் கட்சி | தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி, (NSDAP) |
|
|
|
| பிறப்பு | ஜனவரி 12 1893 ரோசென்ஹெய்ம், பவேரியா பேரரசு, ஜெர்மன் பேரரசு |
| இறப்பு | அக்டோபர் 15 1946 (அகவை 53) நியுரம்பெர்க், ஜெர்மனி |
| வாழ்க்கைத்துணை | கேரின் வோன் கான்ட்ஸ்நோவ் கோரிங் (1923–1931, இறப்பிற்குப்பின்) எம்மி சோன்மன் கோரிங் (1935–1946) |
| பிள்ளைகள் | 4 |
எர்மன் வியெம் கோரிங் (Hermann Wilhelm Goring) (ஜனவரி 12, 1893- அக்டோபர் 15, 1946) ஜெர்மன் நாசிக் கட்சியின் அரசியல் பிரமுகரும், லுப்ட்வாப் (Lutfwaff) என அழைக்கப்படும் நாசி வான்படை இராணுவத்தளபதியுமான இவர் இட்லர் வகித்த பதவிகளின் பெருமைக்கும், வெற்றிக்கும் பெரும் பங்களித்தவர். 22 போர் வானூர்திகளை சுட்டுவீழ்த்திய பெருமைக்குரியவர் மிகச்சிறந்த வானூர்தி ஓட்டுநர் மற்றும் போர் தந்திரம் மிக்கவர். முதலாம் உலகப்போருக்குப்பின் ஓய்வு பெற்ற இராணுவவீரர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் கோரிங் யுத்த விதி மீறல் குற்றத்திற்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயம் முன் நிறுத்தப்பட்டார். ஆணையம் அவருக்கு தூக்குத்தண்டணை விதித்தது தண்டணை நிறைவேறுவதற்கு முன் இரவு அக்டோபர் 15, 1946, அன்று பொட்டாசியம் சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலைபுரிந்து இறந்தார். இவருடைய தந்தை அன்றைய ஜெர்மன் பாதுகாப்பில் இருந்த தென்மேற்கு ஆப்பிரிக்கா வின் தற்பொழுதுள்ள நமிபியாவின் கவர்னர் ஜென்ரலாக பதவி வகித்தவர். கோரிங் இருமுறை திருமணம் புரிந்தவர் முதல் திருமணம் முறிவடைந்தபின் இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார்.