எருமை மறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எருமை மறம் என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று. 400 பாடல்களில் இத்துறைப் பாடல்கள் மூன்று உள்ளன. [1] இது தும்பைத்திணையின் துறைகளில் ஒன்று.

தொல்காப்பியம், தும்பைத் திணையில் 12 துறைகளைக் குறிப்பிடுகிறது. அவற்றில் ‘கூழை தாங்கிய பெருமை’ எனக் குறிப்பிடப்படுவது இத் துறை. [2]

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலில் தும்பைப்படலத்தின் வரும் 24 துறைகளில் ஒன்றாக இது உள்ளது. போர்ப்படை திரும்பி ஓடும்படி நின்று தாக்குவது எருமை மறம். [3]

  • [[]சோழன் கோப்பெருநற்கிள்ளி]] முக்காவல் நாட்டு ஆமூர் மல்லன் என்பவனோடு போரிட்ட காட்சி எருமை மறம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு முழங்கால் மார்பைத் தொட்டுக்கொண்டிருக்கையில், மற்றொரு முழங்கால் பின்புறமாக மண்டியிட்டுக்கொண்டு அவன் ஆமூர் மல்லனோடு மற்போர் புரிந்து வீழ்த்திய செயல் இது. [4]
  • மறவன் கை வேலைக் களிற்றின் மேல் எறிந்த பின் தான் அதன்மேல் ஏறித் தாக்கும் காட்சி எருமை மறம். [5]
  • பசுவிடம் கன்று பால் குடிப்பது போல் ஒருவன் யானையை வேலால் குத்தி அதன் குடரை இழுப்பது எருமை மறம். [6]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. புறம் 80, 274, 275
  2. தொல்காப்பியம், புறத்திணையியல் 14
  3. வெயர் பொடிப்பச் சினம் கடைஇப்
    பெயர் படைக்குப் பின் நின்றன்று. புறப்பொருள் வெண்பாமாலை - 139
  4. சாத்தந்தையார் – புறம் 80,
  5. உலோச்சனார் – புறம் 274,
  6. ஒரூஉத்தனார் – புறம் 275
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமை_மறம்&oldid=3280644" இலிருந்து மீள்விக்கப்பட்டது