எரிக் ஹாப்ஸ்பாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எரிக் ஹாபஸ்பாம் (Eric Hobsbawm, பிறப்பு ஜூன் 9, 1917) ஒரு பிரித்தானிய மார்க்சிய சிந்தனையாளர் மற்றும் வரலாற்றாசிரியர்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கை

ஹாப்ஸ்பாம் 1917ல் எகிப்தில் அலெக்ஸாண்டிரியாவில் யூதப்பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை லியோபால்ட் பெர்ஸி ஓப்ஸ்பாம் (Leopold Percy Obstbaum). தாய் நெல்லி க்ரன்(Nelly Grün). பெற்றோர் சேர்மானிய பின்புலம் கொண்டவர்கள் என்றாலும் குழந்தைகளை ஆங்கிலம் பேசுபவர்களாக வளர்த்தார்கள். 1929ல் தந்தை இறந்தார். தாய் இரண்டுவருடம் கழித்து இறந்தார். எரிக் ஹாபஸ்பாமும் தங்கை நான்ஸியும் தாய்வழி மாமியின் பராமரிப்பில் வாழ்ந்தார்கள். 1933ல் அவர்கள் லண்டனுக்கு புலம்பெயர்ந்தார்கள். எரிக் ஹாப்ஸ்பாம் செயிண்ட் மேரில்போன் க்ராமர் பள்ளியில் படிக்க அராம்பித்தார்

ஹாப்ஸ்பாம் இருமுறை மணம்புரிந்தார். 1943ல் அவர் மணந்த மூரியல் சீமன் (Muriel Seaman) ஐ 1951ல் விவாகரத்து செய்தார். பின்னர் மேரிலின் ஷ்வார்ஸை (Marlene Schwarz) மணந்தார், அவர்களுக்கு இரு குழந்தைகள். ஜூலியா ஹாப்ஸ்பாம் ஆண்டி ஹாப்ஸ்பாம்.

ஹாப்ஸ்பாம் மார்க்சிய நம்பிக்கைகொண்டவர். பிரிட்டன் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர். கட்சியின் வரலாற்று ஆசிரியர்குழு உறுப்பினர். 1998ல் ஹாப்ஸ்பாம் கம்பானியன் ஆஃப் ஆனர் விருது பெற்றார். 2003ல் அவரது ஐரோப்பிய வரலாற்றாய்வுக்காக பால்ஸான் பிரைஸ் பெற்றார்


[தொகு] அரசியல்

1031லேயே ஹாப்ஸ்பாம் ஜெர்மானிய சோசலிச இளைஞர் இயக்கத்தில் சேர்ந்தார். 1936ல் ஜெர்மானிய கம்யூனிஸ்டுக்கட்சியில் சேர்ந்தார். கம்யூனிஸ்டு வரலாற்றாசிரியர் சங்கத்தில் 1946 முதல் 1956 வரை பணியாற்றினார். 1956ல் சோவியத் ஒன்றியம் ஹங்கேரியைத் தாக்கியபோது பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் அந்த குழுமத்தில் இருந்து விலகினார்கள். ஹாப்ஸ்பாம் நீடித்தார். ஆனால் அப்போதே சோவியத் ஒன்றியம் ஸ்டாலினிய நோக்கில் இழைத்த ஜனநாயகப் படுகொலைகளை கண்டிக்கவும் செய்தார்.

ஹாப்ஸ்பாம் பின்னர் ஐரோப்பிய கம்யூனிசத்தை ஆதரித்தார். 1978ல் ஹாப்ஸ்பாம் சமூகத்தில் தொழிலாளர்களுக்கு இருந்த மையப்பங்களிப்பு இல்லாமலாகிவிட்டது என்றும் இனிமேல் மார்க்சியம் அவர்களை மட்டுமே நம்பி இருக்கமுடியாது என்றும் ‘உழைப்பாளர்களின் முன்னோக்கிய பயணம் தடைபட்டதா?’ என்ற கட்டுரையில் எழுதினார். அந்தக்கருத்து சம்பிரதாய மார்க்ஸியர் நடுவே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. மார்க்சிசம் டுடே இதழில் தொடர்ச்சியாக அரசியல் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருய்ந்தார். 1960களுக்குப்பின் ஹாப்ஸ்பாம் சோவியத் பாணி மார்க்சியத்தில் நம்பிக்கை இழந்து மார்க்சிய செயல்திட்டங்களில் சமகாலத்தன்மை கொண்ட மாறுதல்களுக்காக வாதிட ஆரம்பித்தார்

[தொகு] பணி

ஹாப்ஸ்பாம் பெர்லினின் பிரின்ஸ் ஹென்ரிச் ஜிம்னேசியத்தில் கல்விபயின்றார். பின்னர் செயிண்ட் மேரில்போன் கிராமர் பள்ளியிலும், கேம்ப்ரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியிலும் கல்விபயின்றார். ஃபேபியன் சமூகத்தைப்பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். 1947ல் ஹாப்ஸ்பாம் லண்டன் பல்கலையில் பிர்க்பெக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். 1959 முதல் ஆய்வுபேராசிரியராகவும் 1982 முதல் முதுநிலை பேராசிரியராகவும் பணியாற்றினார்.

[தொகு] படைப்புகள்

ஹாப்ஸ்பாம் ஐரோப்பிய வரலாறைப்பற்றிய அவரது மூன்று நூல்களுக்காகவே பெரிதும் மதிக்கப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டைப்பற்றி அவர் எழுதிய புரட்சியின் யுகம் (The Age of Revolution: Europe 1789-1848) முதலியத்தின் யுகம் (The Age of Capital: 1848-1875)சாம்ராஜ்ய யுகம் (The Age of Empire: 1875-1914) ஆகிய நூல்கள் செவ்வியல் ஆக்கங்கள் என கருதப்படுகின்றன. ஹாப்ஸ்பாம்எழுதிய மார்க்ஸிய நூல்கள் மார்க்ஸிய ஆய்வால்ர்கள் நடுவே செல்வாக்குடன் உள்ளன

"http://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_ஹாப்ஸ்பாம்&oldid=942467" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்