எம். கே. மீரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். கே. மீரான் (இ. 1972) ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மீரான், தேனி மாவட்டம், உத்தமபாளையம் அல்லாபிச்சை என்ற குலாம் மைதீன்-தங்கம்மாள் இணையருக்கு மகனாகப்பிறந்தவர். போடியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் ஜவகர்லால் நேருவின் நேர்முக உதவியாளராக இருந்த ஜி. பார்த்தசாரதியுடன் சேர்ந்து சென்னையில் கல்வி பயின்றார். தனது நண்பர் பெ. துாரன் என்பவருடன் இணைந்து பித்தன் என்ற கையெழுத்துப் பிரதியினை நடத்தினார். கல்லுாரி படிப்பு முடிந்தவுடன் கோயமுத்துாரில் சார்-ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

பணியின்போது பிரித்தானியருக்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடைபெற்றது. அதில் காவல்துறை அதிகாரி என்ற முறையில் மக்களை தாக்கவேண்டிய நிர்பந்தம் செய்யப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. பணியில் இருந்து விலகி 1941 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராக தந்திக்கம்பிகளை அறுத்தல், அரசுக்கு எதிராக துண்டு அறிக்கைகள் விநியோகம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். இதற்காக வேலுார், அலிப்புர், பெல்லாரி சிறைகளில் ஒரு வருட காலம் தண்டனையை அனுபவித்தார். அதன் பின்னர் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார்.

மீரான் 1972 ஆம் ஆண்டு இறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._மீரான்&oldid=2717542" இலிருந்து மீள்விக்கப்பட்டது