எம். ஏ. பசீர் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஏ. பசீர் அகமது (பிறப்பு: ஏப்ரல் 1 1944) இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இயல்பாக கவிதைகளை எழுதக்கூடிய ஆற்றல்மிக்கவர். புதுவை மாநிலத்தின் அம்பகத்தூரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அவ்வூர் அரசாங்கப் பள்ளியில் கற்று பின்பு மாயூரம் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் வந்த இவர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிள்ளார். மேலும் இவர் பாடல், நடித்தல், ஓவியம் வரைதல் போன்ற துறைகளில் ஆர்வமிக்கவர்.

தொழில்[தொகு]

ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவராவார்.

வகித்த பதவிகள்[தொகு]

இவர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு உறுப்பினராகவும், வெண்ணிலா கலை அரங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும், பெக் கியோ இந்தியர் நற்பணிக் குழுவின் பொருளாளராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக செயற்குழு உறுப்பினராகவும், சிங்கப்பூர் இந்தியர் கலைஞர் சங்கச் செயலவை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றார்.

கலைத்துறையில்[தொகு]

கலைத்துறையில் கூடிய ஈடுபாடுள்ள இவர் சிறு வயது முதல் பல பாடல் போட்டிகளில் பங்பேற்று பரிசில்களை வென்றுள்ளார். பல்வேறு கலைநிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். சிங்கப்பூர் வானொலியில் பகுதிநேரக் கலைஞராகப் பணியாற்றிவரும் இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட சமூக நாடகங்களிலும், வானொலி நாடகங்களிலும் தொடர்ந்தும் நடித்து வந்தார்.

எழுதியுள்ள நூல்[தொகு]

இளம் பிறையே ஏன் சிரித்தாய்!

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._பசீர்_அகமது&oldid=1645772" இலிருந்து மீள்விக்கப்பட்டது