எம். எம். பகுர்தீன் பாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எம். பகுர்தீன் பாவா (பிறப்பு 1936) பக்கீர்பைத் கலையில் ஈடுபாடு கொண்ட ஒரு சிரேஷ்ட கலைஞராவார்.

வரலாற்றுச் சுருக்கம்[தொகு]

மன்னார் மாவட்டத்தில் முசலி பகுதி, சிலாபத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யூசுப் முஹிதீன் பக்கீர், கொலுசம் பீபீ தம்பதியினரின் மகனாவார். எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் 6-ம் வகுப்பு வரை கற்றார். இவரின் மனைவி எம். எஸ். பாத்தும்மா. இவருக்கு 12 பிள்ளைகள் உள்ளனர்.

பக்கீர்பைத் பாடல்.[தொகு]

தெருத் தெருவாக, பகுதி பகுதியாக, ஊர் ஊராகப் பக்கீர் பாடல்களைப் பாடி, தன் ஜீவனோபாயத்தைக் கழித்து வருகின்றார்.

பக்கீர்பைத் கருப்பொருள்[தொகு]

பலவிதமான புத்தகங்கள்ää இஸ்லாமியப் பாடல்கள், நற்கீர்த்தனைகள், பழைமை வாய்ந்த ஆனந்தக்களிப்புக்கள், பாத்திமா நாயகியின் வரலாறு, நூறு மசாலா போன்ற பல பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர்.

விருதுகள்[தொகு]

1994-ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு 'வாழ்வோரை வாழ்த்துவோம்' நிகழ்ச்சியில் இவருக்கு "நூருல் கஸீதா" (கவிதை ஒளி) விருதும், பொற்கிழியும் வழங்கி கௌரவித்தது.

ஆதாரம்[தொகு]

'வாழ்வோரை வாழ்த்துவோம்' நினைவு மலர், வெளியீடு: முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் - 1994.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எம்._பகுர்தீன்_பாவா&oldid=1406057" இலிருந்து மீள்விக்கப்பட்டது