எம். கே. முருகானந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். கே. முருகானந்தன்
பிறப்பு27 மார்ச் 1948
வியாபாரிமூலை ,யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுமருத்துவர் ,ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்முத்தையா கதிரவேற்பிள்ளை, பரமேஸ்வரி

எம்.கே. முருகானந்தன் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை, வியாபாரிமூலை. ஈழத்து எழுத்தாளர். மருத்துவர். 27 மார்ச் 1948 இல் பிறந்தவர். இவர் நலவியல் கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

மருத்துவத் துறையில்[தொகு]

கொழும்பு மருத்துவ பீடத்தில் 1975 ம் ஆண்டு (M.B.B.S) பட்டமும், 2003 ம் ஆண்டில் குடும்ப வைத்திய துறையில் டிப்ளோமா (DFM) பட்டமும் பெற்றவர். 1975 முதல் அரச வைத்தியசாலைகளில் குறுகிய காலம் பணியாற்றிய பின்னர் 1980ம் ஆண்டு முதல் குடும்ப வைத்தியராகப் பணியாற்றி வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த வியாபாரிமூலையில் (இணுவில் மருத்துவமனையில்) பிறந்தவர். முத்தையா கதிரவேற்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகள் பெற்றெடுத்த ஐவரில் மூத்தவர். இவருக்கு இரு குழந்தைகள்.

தொழில்[தொகு]

அரசசேவை

  • உள்ளகப் பயிற்சி- பதுளை பொது மருத்தவமனை
  • மீகஹகியுல கிராம வைத்தியசாலை
  • பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

தனியார் துறை 1980முதல்

  • 1980-1996 மருதடி பருத்தித்துறை
  • 1997- 2005 348, காலிவீதி வெள்ளவத்தை
  • 2005-2006 மருதடி பருத்திததுறை
  • 2006 மார்கழி முதல் Mediquick, 48/1,Dharmarama Road, Colombo 06

பாடசாலைப் பருவம்[தொகு]

  • ஆரம்பப் பாடசாலை: மேலைப் புலோலி சைவபாலிகா பாடசாலை
  • மேலைப்பு லோலி சைவப்பிரகாச வித்தியாசாலை
  • ஹாட்லிக் கல்லூரி
  • மருத்துவபீடம்: இலங்கை பல்கலைக்கழகம் கொழும்பு வளாகம் 1970-1975 M.B.B.S (Cey)
  • பட்டமேற் படிப்பு: Diploma in Family Medicine (Colombo)

மாணவ கால கலை இலக்கிய ஈடுபாடுகள்[தொகு]

  • 4ம் வகுப்பில்: தினகரனில் 'எனது கிராமம்' கட்டுரை
  • ஆரம்பப் பாடலையில்: மேடைப் பேச்சுகள், நடிப்பு
  • ஹாட்லிக் கல்லூரியில்: கல்லூரி சஞ்சிகை 'குறள் காட்டும் நட்பு' கட்டுரை, இலக்கிய மன்றம், மாணவர் தலைவர், புகைப்பட சங்க உறுப்பினர்,
  • வித்துவான க.ந.வேலன் பாராட்டுப் பெற்ற மாணவன், அவரால் இலக்கிய, முற்போக்கு கொள்கை ஈடுபாடு
  • Spencer> W.N.S Samuel ஆகியோரால் ஆங்கில வாசிப்பில் ஈடுபாடு

மருத்துவ மாணவ காலத்தில்[தொகு]

  • இந்து மன்ற சஞ்சிகையின் பத்திராபதிபர், அடுத்த ஆண்டு மன்றத் தலைவர்
  • கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கச் செயற்பாடுகளில்-
  • கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் நடாத்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியில் 2ம் பரிசு
  • மேடை நாடகம்- சிறந்த நடிகர்
  • கவிதை அரங்கத் தலைமை
  • மதிவாணன் இலங்கை வானொலியில் தயாரித்த சங்கநாதம் நிகழ்ச்சிகளில் பங்களிப்பு

இளமைப்பருவகால ஆகர்சிப்புகள்[தொகு]

  • உறவினர்களான பண்டிதர்.பொன.கிருஸ்ணபிள்ளை,
  • கவிஞர் வே.சிவக்கொழுந்து (யாழ்ப்பாணன்),
  • இளைப்பாறிய ஆனந்தா கல்லூரி பிரதி அதிபர் வே.தா.சிவகுருநாதன்.
  • ஹாட்லிக் கல்லூரியில் விசேட அதிதிகளாக கலந்து உரையாற்றிய தீபம் ஆசிரியர், நா.பார்த்சாரதி,
  • கனக செந்திநாதன்.
  • மல்லிகையூடாக ஜீவா

எழுத்துலக வாழ்வு[தொகு]

சிறு வயது முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டவர். முக்கிய ஈடுபாடு நலவியல் துறையாகும். இலங்கையின் அனைத்து முக்கிய தமிழ் பத்திரிகைகளிலும் இவரது நலவியல் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மல்லிகை, ஞானம், சிரித்திரன், ஆதவன், நான்காவது பரிமாணம், போன்ற பல சஞ்சிகைகளில் சில சிறுகதைகளையும், பல விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் நீண்ட காலம் நலவியல் நிகழ்ச்சிகளை நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது. பதிவுகள் இணையத் தளத்தில் உங்கள் நலம் என்ற தொடரை எழுதியுள்ளார்.

தற்பொழுது தினக்குரல் தினசரியில் ஹாய் நலமா என்ற பத்தியை எழுதி வருகிறார்.

படைப்புகள்[தொகு]

  • அனுபவக் குறிப்புகள்* டொக்டரின் டயறியிலிருந்து (சிரித்திரன் 1986-87)
  • டொக்டரின் கிறுக்கல்கள் (மல்லிகை)
  • வைத்திய கட்டுரைகள் (வீரகேசரி, தினகரன், முரசொலி, ஈழநாடு, ஈழநாதம், தினக்குரல், இருக்கிறம், ஜீவநதி)
  • நலவியல் பத்தி எழுத்துக்கள்* வைத்திய கலசம் (முரசொலி)
  • ஹாய் நலமா (தினக்குரல்)
  • இலக்கிய கட்டுரைகள் (மல்லிகை, ஞானம், ஆதவன்)
  • சாயி மார்க்கம் இருமாத ஆன்மிக சஞ்சிகையின் ஆசிரியர் 1994-1996

படைப்புகள் வானொலி, தொலைக்காட்சிகளில்[தொகு]

  • ரூபவாஹினியின் EYE Channal பல வருடங்களாக ஞாயிறு தோறும் நலவியல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது
  • சக்தி தொலைக்காட்சியில் பல நலவியல் உரைகள்
  • இலங்கை வானொலியின் தேசிய ஒலிபரப்பில் நலமாக வாழ்வோம் நிகழ்ச்சி பல வருடங்களாக.

வெளியாகியுள்ள நலவியல் நூல்கள்[தொகு]

  • சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்
  • தாயாகப் போகும் உங்களுக்கு (இலங்கையில் 1 பதிப்பு, NCBH சென்ளை 3 பதிப்புகள்)
  • எயிட்ஸ் (இலங்கையில் 3 பதிப்புகள்)
  • பாலியல் நூல்கள்
  • போதையைத் தவிருங்கள்
  • வைத்திய கலசம்
  • நீங்கள் நலமாக (இலங்கையில் 5 பதிப்புகள்)
  • எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள்
  • நீரிழிவுடன் நலமாக வாழுங்கள்
  • சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு
  • "கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி?"
  • உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள்

வெளியாகியுள்ள இலக்கிய நூல்கள்[தொகு]

  • டொக்டரின் டயறியிலிருந்து (மல்லிகைப் பந்தல் வெளியீடு)
  • மறந்து போகாத சில

விருதுகள்[தொகு]

  • இலங்கை தேசிய சாகித்திய விருது (அ. தாயாகப் போகும் உங்களுக்கு, ஆ. நீங்கள் நலமாக)
  • யாழ் இலக்கிய வட்டப் பரிசு (அ. தாயாகப் போகும் உங்களுக்கு)

பரிசுகள்[தொகு]

  • ஊடகத்துறையில் விஞ்ஞானப் பரப்புரைக்காக இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம்
  • கொழும்பு பல்கலைக் கழக தமிழ் சங்கத்தினர் சிறந்த தமிழ் வலைப் பதிவாளருக்கான விருது (2011)

இணைய இதழ்கள்[தொகு]

நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._முருகானந்தன்&oldid=3743267" இலிருந்து மீள்விக்கப்பட்டது