எப்பிக் உலாவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மேம்பாட்டாளர்(கள்) | ஹிடன் ரிஃபிளெக்சு |
|---|---|
| தொடக்க வெளியீடு | சூலை 15, 2010 |
| Stable release | 1.0 / சூலை 15, 2010 |
| இயக்க அமைப்பு | வின்டோஸ் எக்ஸ்பி/ விஸ்டா / 7 |
| பொறி | கெக்கோ |
| இணையத்தளம் | www.epicbrowser.com |
எப்பிக் (Epic) என்பது மோசில்லாவின் ஃபயர்பாக்ஸை அடிப்படையாகக் கொண்டு வருவிக்கப்பட்ட இந்தியச் சூழலுக்கு ஏற்ற ஒரு இந்திய வலை உலாவி ஆகும். பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்திய நிறுவனம் இந்த வலை உலாவியை உருவாக்கியுள்ளது.
சிறப்புகள்[தொகு]
- உள்ளார்ந்த நச்சுநிரல் எதிர்ப்பான்
- பல்வேறு இந்திய மொழிகளுக்கான உள்ளார்ந்த ஆதரவு
- தேர்ந்தெடுக்க 1000-க்கும் மேற்பட்ட அழகுவடிவங்கள் (themes)
- ஒரு சொடக்கில் ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களுக்கான இணைப்பு.