என். ஆர். அழகராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். ஆர். அழகராஜா என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் அதிகம் வசிக்கும் ராஜூக்கள் சமூகத்தைச் சேர்ந்த இவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள சண்முகசுந்தரபுரம் எனும் ஊரில் நூற்பாலை ஒன்றை நிறுவி அதை நடத்தி வருகிறார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு[1] 2001 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பின்ராகப் பணியாற்றி இருக்கிறார். 1989 ஆண்டு இதே தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.[2] மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேனி - அல்லிநகரம் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்து வருடங்கள் நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றி இருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 8. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "Statistical Report on General Election 1989 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 147. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஆர்._அழகராஜா&oldid=3546158" இலிருந்து மீள்விக்கப்பட்டது