என்ரிக்கோ பெர்மி
| என்ரிக்கோ பெர்மி Enrico Fermi |
|
|---|---|
| பிறப்பு | செப்டம்பர் 29, 1901 |
| பிறப்பிடம் | ரோம், இத்தாலி |
| இறப்பு | நவம்பர் 28 1954 (அகவை 53) |
| இறப்பிடம் | சிக்காகோ, இலினோய், |
| குடியுரிமை | இத்தாலி (1901-1938) ஐக்கிய அமெரிக்கா (1944-1954) |
| துறை | இயற்பியல் |
| பணி நிறுவனம் | Scuola Normale Superiore University of Göttingen University of Leiden University of Rome La Sapienza கொலம்பியா பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | Scuola Normale Superiore |
| ஆய்வு நெறியாளர் | லியூஜி புச்சியாண்டி |
| அறியப்படுவது | புதிய கதிரியக்கத் தனிமங்கள் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு தொடர்வினை, பெர்மி-டிராக் புள்ளியியல் பீட்டா சிதைவுக் கொள்கை |
| விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1938) |
என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi; செப்டம்பர் 29, 1901 – நவம்பர் 28, 1954) என்பவர் ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞராவார். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியமைக்காகவும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். ஃபெர்மி தூண்டல் கதிரியக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 1938-ம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது[1]. 1952 இல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமம் ஒன்றுக்கு இவரது நினைவாக பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.
பொருளடக்கம் |
வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]
என்ரிகோ பெர்மி 1901 இல் செப்டம்பர் 29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில் பிறந்தார். சிறு வயதிலேயே இயற்பியலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு இடங்களிலும் படித்துப் இயற்பியலில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது க்க்திரியக்க ஆய்வுக்காக 21 ஆம் அகவையில் முனைவர் பட்டம் பெற்றார். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டா சிதைவுக் கொள்கையைத் தோற்றுவித்தார்.
சிக்காகோ பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1942 இல் முதல் அணுக்கரு உலையில், முதல் அணுக்கரு தொடர்வினையை நிகழ்த்திக் காட்டினார்.
1954 நவம்பர் 28 ஆம் தேதி தன் 53 ஆம் வயதில் பெர்மி எதிர்பாராத விதமாகப் புற்று நோயினால் காலமானார்.
இவற்றையும் பார்க்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- உலகின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி
- Obituary, NY Times, November 29, 1954, Enrico Fermi Dead at 53; Architect of Atomic Bomb
- About Enrico Fermi
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Snow, Charles (1981). The Physicists: A Generation that Changed the World. Little Brown.