எட்வேர்ட் வைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எட்வேர்ட் ஹிகின்ஸ் வைட்
Edward Higgins White, II
எட்வேர்ட் வைட்
நாசா விண்வெளி வீரர்
தேசியம் அமெரிக்கர்
தற்போதைய நிலை பயிற்சியின் போது கொல்லப்பட்டார்
பிறப்பு நவம்பர் 14, 1930
டெக்சாஸ், Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஜனவரி 27, 1967 (age 36)
புளோரிடா, Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
வேறு தொழில் வானூர்தி ஓட்டுநர்
படிநிலை லெப்டினண்ட் கேர்ணல்
விண்பயண நேரம் 4நா 01ம 56நி
தெரிவு 1962 நாசா பிரிவு
பயணங்கள் ஜெமினி 4
பயண
சின்னம்
Gemini Four patch.jpg

எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் (Edward Higgins White, II; நவம்பர் 14, 1930 – ஜனவரி 27, 1967) அமெரிக்க வான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார். ஜூன் 3 1965 ஆம் ஆண்டில் விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார்.

விண்வெளிப் பயணம்[தொகு]

எட்வேர்ட் வைட் விண்வெளியில் நடக்கும் போது எடுக்கப்பட்ட படம்

எட்வேர்ட் வைட் 1962 இல் நாசாவினால் இரண்டாவது கட்ட விண்வெளிப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார். ஜெமினி திட்டத்தில் இணைந்து ஜெமினி 4 விண்கலத்தைத் தனியே செலுத்தி ஜூன் 3, 1965 இல் 21 நிபமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவர் பின்னர் ஜெமினி 7 விண்கலத்துக்கான பக்கபல (backup) விமானியாக இருந்தார். அப்பல்லோ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார்.

மறைவு[தொகு]

அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள்

புளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் அப்பல்லோ 1 விண்கலப் பயணத்துக்கான பயிற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் தனது சகாக்களான வேர்ஜில் கிறிசம், ரொஜர் சஃபி ஆகியோருடன் சேர்த்து கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எட்வேர்ட்_வைட்&oldid=1659513" இருந்து மீள்விக்கப்பட்டது