எட்டப்ப நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மதுரையில் நாயக்கர்கள் ஆட்சிக் காலம் ஏற்படும் முன்பே ராஜகம்பளம் மக்களின் பாளையங்கள் குறிப்பாக எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி , போடிநாயக்கனூர், சேந்தமங்கலம் , சாப்டூர் போன்ற பாளையங்களில் எட்டையபுரம் என்னும் பகுதியல் எட்டப்பர் வம்சத்தினை சேர்ந்தோர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர் . மிகப்பெரிய பாளையங்களில் ஒன்றாக நாயக்கர்களின் ஆட்சி காலத்திலும் விளங்கியது எட்டையபுரம் .

பொருளடக்கம்

[தொகு] பூர்விகம்

ஆந்திரம் மாநிலம் சந்திரகிரி என்னும் பகுதியில் கி.பி, 856 இல் பெரியப்பா நாயக்கர் என்னும் சிற்றரசரால் நிறுவப்பட்ட ஆட்சியினர். இவர்கள் ராஜகம்பளம் இனத்தில் உள்ள சில்லவார் பிரிவில் உள்ளவர்கள். இசுலாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து இனத்தின் பெண்ணை கேட்டதாகவும் அதனால் தங்கள் இன பெண்களை காப்பாற்ற தெற்கு நோக்கி வந்ததாகவும் கூறப்படும் தொட்டிய நாயக்கர்களின் கதையினை போலவே இவர்களும் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் இவ்வினத்து மக்கள் மேற்கு பகுதிகளிலும், வளமான பகுதிகளிலும் குடிபெயர்ந்தனர் .

[தொகு] பாண்டியர்களிடம் நன்மதிப்பு

இவர்கள் தமிழகதிற்கு பதினோராம் நூற்றாண்டில் வருகையில் இங்கு பாண்டியர்களின் ஆட்சிக்காலம் நடைபெற்று கொண்டு இருந்தது . மதுரை பகுதிகளில் அதிகமாக குடிபெயர்ந்த இவர்கள் இயல்பாகவே முரட்டு குடியினர் என்பதால் மதுரை பகுதிகளில் திருட்டு தொழில் ஈடுபடும் சில சமுகத்தை சேர்ந்தவர்களை அடக்க பாண்டிய மன்னர்களால் "திசைக்காவல்" என்னும் பொறுப்பைப் பெற்றனர். இங்குள்ள கள்ளர்களை அடக்கி நாட்டினை காத்ததால் பாண்டியர்களின் நன்மதிப்பை பெற்றதோடு சில ஊர்களையும் பரிசாக பெற்றனர். தென் மதுரையில் இவ்வினத்தவர்கள் குடிபெயர்ந்து தங்கள் ஆட்சியினை அமைதுக்கொண்டனர்.[1]

[தொகு] நல்லம்ம நாயக்கர்

எட்டப்பர் வம்சத்தில் ஒருவரான நல்லம்ம நாயக்கர் சாத்தூர் பகுதியில் தங்கள் இனத்தவர்களோடு குடிபெயர்ந்து அங்கு நல்லம்ம நாயக்கர் கோட்டையினை அமைத்து சுயாட்சி செய்து வந்தார். அதற்கு அடுத்ததாக வந்த குமார எட்டப்ப நாயக்கர் இலம்புவனம் என்னும் பகுதியை ஆட்சி செய்துக் கொண்டு இருந்த அருஞ்சுன தேவன், முதால தேவன் என்பவர்களை வென்று தங்கள் ஆட்சிப் பகுதியை விரிவாக்கம் செய்தார். இதன் காரணமாக இலம்புவனம், சுரைக்காபட்டி, ஈரால் , பாண்டவமங்கலம், வாழம்பட்டி, ராமநூத்தூர், நடுவபட்டி, நம்பியபுரம் போன்ற பகுதிகள் எட்டயபுர மன்னர்களின் வசம் ஆகியது . இவ்வெற்றின் காரணமாக ”ஜெகவீர ராம பாண்டியர்” என்று அழைக்கப்பட்டார் . [2]

[தொகு] ஜெகவீர ராம கெஜல்லு எட்டப்ப நாயக்கர்

இவரது ஆட்சிக்காலத்தில் எட்டையபுரம் எல்லை தெற்கு நோக்கி விரிவாக்கம் கண்டது . சாயமலை , மணியாச்சி , கோவில்பட்டி, திருநெல்வேலி வடக்கு போன்ற பகுதிகளை கைப்பற்றுகிறார் . இளசை என்ற பெயரை கொண்ட சிறு ஊரினை ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் என்னும் 19 வது பட்டத்தரசர் ”எட்டையபுரம்” என்று பெயர் மாற்றம் செய்து அங்கு சிவன் கோவில், அரண்மனை அமைத்து ஆட்சி செய்தார் .

[தொகு] எட்டப்பர் - பெயர்க்காரணம்

விஜயநகர பேரரசை நிறுவ குமார கம்பணன் என்ற மன்னர் தெற்கு நோக்கி படையெடுத்து வருகையில் எட்டயபுர மன்னர்கள் அவருக்கு உதவினர் . போரில் எட்டயபுர மன்னர் இறக்கவே அவரின் எட்டு பிள்ளைகளுக்கும் நானே அப்பன் என்று குமார கம்பணன் தெரிவித்து ”எட்டப்பர்” என்ற அடைமொழியை இவ்வினத்தவர்கள் சூடி கொள்ளுங்கள் என்று கூறினார் . எனவே பிறகு வந்த அனைத்து வம்சத்தினரும் தங்கள் பெயருக்கு பின்னால் எட்டப்பர் என்று இட்டுகொண்டனர் .

[தொகு] எடவங்கை கெஜ்ஜலப்பா நாயக்கர்

வேட்டையாடுவதை குலத்தொழில் என்று கொண்ட இவ்வரசர்கள் ஒரு நாள் வேட்டைக்கு செல்கையில் எதிரியினர் தாக்க முற்பட்டபொழுது தனது இடது கையினால் தாக்க முற்பட்டவனை கொன்றதால் அன்று முதல் எடவங்கை நாயக்கர் என்று அழைக்கபட்டார் . இவருக்கு பல மனைவிகளும் , பல குழந்தைகளும் இருந்தனர்.

[தொகு] சமய நல்லிணக்கம்

ரண சூரப்ப நாயக்கர் என்பவர் கிறிஸ்தவ , இசுலாமிய மதத்தையும் , அவற்றை வழிபடுபவர்களுக்கு தீங்கு தராமலும் இருந்துவந்துள்ளார். இவர் கட்டிய திருச்சபை இன்றும் கண்டாம நாயக்கன் பட்டி பகுதியில் உள்ளது. இதன் காரணமாக அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயமான நாடார் , பள்ளர், பறையர் போன்றோர்கள் மதம் மாறினார். ஆனால் அடுத்ததாக ஆட்சி செய்த வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் இந்து மத வெறியராக இருந்தார். மதம் மாறியவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். குறிப்பாக நாடார் சமுதாயத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர் .

[தொகு] ஜெகவீர ராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர்

இவர் பல கோவில்களை கட்டயுள்ளார் . அன்னதானம் , நிலதானம் போன்ற பல பணிகளை செய்துள்ளார் . இவர் கட்டிய சில கோவில்கள் :

  • அய்யன் சுப்ரமணிய சாமி கோவில்
  • கழுகுமலை கோவில்
  • திருநெல்வேலி காந்திமதி அம்மன் அஷ்ட மண்டபம்
  • சுந்திர விலாசம்
  • கலியான மகால்
  • சுப்ரமணிய விலாசம்
  • பல ஏரிகள் , குளங்கள் அமைத்தல்.

இவருக்கு ஐந்து மகன்கள்

  • ஜெகவீர ராம குமார எட்டப்ப நாயக்கர்
  • வெங்கடேஸ்வரர்
  • எட்டு நாயக்கர்
  • முத்துசாமி பாண்டியன்
  • ராமசாமி பாண்டியன்

இவரது ஆட்சி காலத்தில் எட்டயபுர நாடு பல வளர்சிகளை கண்டது .

[தொகு] தமிழ் வளர்ச்சி

எட்டையபுரம் மன்னர்கள் அனைவரும் தமிழ்பற்று கொண்டவர்கள் . சுப்ரமணிய பாரதிக்கு ”பாரதி” என்ற பட்டம் தந்தவர்கள் எட்டயபுர மன்னர்கள். அதே போல சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், சீறாப்புராணம் இயற்றிய உமறு புலவர் போன்றவர்களை எட்டயபுர அரசவை ஆதரித்தது. கல்விநிலையங்கள் அமைத்து இலவச உணவுத்திட்டம் கொண்டு கல்வி பரப்பினர். பாண்டியர்களின் ஆட்சி காலத்திலேயே சுயாட்சி அதிகாரம் கொண்ட நாடு, நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் மிக சிறந்த பாளையங்களில் ஒன்றாக திகழ்ந்தது .


[தொகு] ஆங்கிலேயர் பற்றிய நிலைப்பாடு

எல்லை பிரச்சனை காரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோர்களுக்கும் எட்டயபுர மன்னர்களுக்கும் மனகசப்பு இருந்து வந்தது . இவர்களின் இந்த பிரிவினை பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் எட்டப்பரை தங்கள் வசம் கொண்டு வந்தனர், ஆனால் இன்றும் எட்டயபுர மக்கள் எட்டப்பரை தவறாக சொல்வதை கண்டிகின்றனர். இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் எட்டப்பர் துரோகம் செய்ய வில்லை என்று தெரிவிக்கின்றனர்.[3] கட்டபொம்மனுக்கும் எட்டப்பருக்கும் குடும்ப பிரச்சனை இருந்த காரணத்தால் பிரிய நேரிட்டது . ஆனால் எட்டயபுர அரசர்களும் விடுதலை விரும்பிகளாகவே இருந்து வந்துள்ளனர். ஜெகவீரபாண்டிய எட்டப்ப நாயக்கர் என்பவர் ஆங்கிலேயருக்கு வரிதர மறுத்து ராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி முதலிய ஊர்களுக்கு சென்று மறைந்து வரிதராமல் இருந்துவந்துள்ளனர். அவர் செல்லும்வழியில் அருப்புக்கோட்டை முதலிய ஊர்களுக்கு சென்று தங்கள் நாட்டிலும் இவ்வாறான கோட்டைகள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார்.[4]

[தொகு] ஜமீன் பகுதி

415429 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய நாடாக திகழ்ந்தது. வண்டல் மண், பருத்தி , கம்பு , சோளம் , மிளகாய் போன்றவை விளையும் பகுதி. இங்கு அதிகமாக ராஜகம்பளம், மணியக்கார தேவர், தாழ்த்தபட்டோர் வாழ்கின்றனர் .

[தொகு] படை பலம்

வலிமையான படைபலம் கொண்டு இருந்தனர் . அழகு முத்துக்கோன் என்ற சேர்வை படைத்தளபதியாக கொண்டு இருந்தனர் .[5]

[தொகு] மேற்கோள்கள்

  1. http://princelystatesofindia.com/Polegars/ettayapuram.html
  2. http://www.archive.org/stream/aristocracyofsou00vadiuoft/aristocracyofsou00vadiuoft_djvu.txt
  3. http://historicalleys.blogspot.com/2008/12/cat-ettappa-dumby.html
  4. http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=5024&ncat=9
  5. http://www.mathavaraj.com/2009/08/2.html
"http://ta.wikipedia.org/w/index.php?title=எட்டப்ப_நாயக்கர்&oldid=931637" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி