எச்.ஏ.எல். துருவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருவ்
Dhruv
இந்திய வான்படையின் துருவ் உலங்குவானூர்தி
வகை பயன்பாட்டு உலங்குவானூர்தி
உருவாக்கிய நாடு இந்தியா
உற்பத்தியாளர் இந்துசுதான் வானறிவியல் நிறுவனம்
வடிவமைப்பாளர் சுற்று இறக்கை ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையம்[1]
முதல் பயணம் 20 ஆகத்து 1992[2]
அறிமுகம் 2002[2]
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் இந்தியத் தரைப்படை
இந்திய வான்படை
இந்தியக் கடற்படை
தயாரிப்பு எண்ணிக்கை 400+ (2024)[3]
அலகு செலவு 400 மில்லியன் (US$5.0 மில்லியன்).[4]
மாறுபாடுகள் ருத்ரா
பின் வந்தது இலகுரக போர் உலங்கு வானூர்தி

எச்ஏஎல் துருவ் (HAL Dhruv) என்பது ஒரு பயன்பாடு உலங்கு வானூர்தி ஆகும். இது இந்தியாவின் இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் செருமனியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.

இதன் முதல் பரிசோதனை வான் பயணம் 1992 இல் நடந்தது, ஆயினும் ராணுவத்தின் தேவைகள் மாறுபட்டதாலும் நிதிப் பற்றாக்குறையினாலும் இத்திட்டம் தாமதமடைந்தது.[2] அதன் பின்னர் இந்தியா நடத்திய அணு ஆயுத பரிசோதனையினால் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ தடைகளினால் இந்த திட்டம் மேலும் தாமதமடைந்தது. இறுதியில், இது 2002 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புப் படைகளின் உபயோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.[2]

இது மேல் பகுதியில் நான்கு பட்டைகள் கொண்ட ஒரு பெரிய சுழழியையும், வால் பகுதியில் ஒரு சிறிய சுழழியையும் கொண்டுள்ளது.[5] இந்த உலங்கூர்தி இராணுவம் மற்றும் பொது உபயோகம் இரண்டையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இது நேப்பாளம், இசுரேல், மாலத்தீவு மற்றும் மொரிசியசு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.[6][7][8][9]

விவரக்குறிப்புகள்[தொகு]

தரவு எடுக்கப்பட்டது: [10][11]

பொது இயல்புகள்

  • குழு: 2
  • கொள்திறன்: 12
  • நீளம்: 15.87 m (52 அடி 1 அங்)
  • அகலம்: 3.15 m (10 அடி 4 அங்)
  • உயரம்: 4.98 m (16 அடி 4 அங்)
  • மொத்தப் பாரம்: 4,445 kg (9,800 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 5,800 kg (12,787 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 1,055 kg (2,326 lb)
  • சக்தித்தொகுதி: 2 × தர்போமேக்கா டிஎம் 333 , 807 kW (1,082 shp) each
  • சக்தித்தொகுதி: 2 × எச்ஏஎல்/தர்போமேக்கா சக்தி 1-எச் , 1,068 kW (1,432 shp) each
  • முக்கிய சுழலி விட்டம்: 13.2 m (43 அடி 4 அங்)
  • முக்கிய சுழலி பரப்பளவு: 136.85 m2 (1,473.0 sq ft)

செயற்பாடுகள்

  • செல்லும் வேகம்: 250 km/h (155 mph; 135 kn)
  • வரம்பு: 630 km (391 mi; 340 nmi)
  • சகிப்புத்தன்மை: 3 மணி 42 நிமிடங்கள்
  • உச்சவரம்பு: 6,096 m (20,000 அடி) [12]
  • ஈர்ப்பு விசை வரம்பு: 3.5

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rotary Wing". Hindustan Aeronautics Limited இம் மூலத்தில் இருந்து 9 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211009163535/https://hal-india.co.in/Rotary%20Wing/M__326. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Equipment: Dhruv". இந்தியத் தரைப்படை. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 13, 2011.
  3. Philip, Snehesh Alex (22 October 2022). "Over 400 indigenous Dhruv and its variant helicopters built since 2002, but at least 23 crashed". The Print. https://theprint.in/defence/over-400-indigenous-dhruv-and-its-variant-helicopters-built-since-2002-but-at-least-23-crashed/1178686/. 
  4. Siddiqui, Huma (15 சூலை 2008). "HAL on a Dhruv ride in LatAm". பைனான்சியல் எக்ஸ்பிரசு. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2011.
  5. Jackson, Paul (2003). Jane's All the World's Aircraft 2003–2004. Coulsdon, UK: Jane's Information Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7106-2537-5. 
  6. syndication (2024-02-08). "Indian troops in Maldives will be replaced by 'competent Indian technical personnel': MEA". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.
  7. "HAL workers may replace military staff in Maldives". The Times of India. 2024-02-09. https://timesofindia.indiatimes.com/india/hal-workers-may-replace-military-staff-in-maldives/articleshow/107535138.cms. 
  8. "La police s'équipe d'un nouvel hélicoptère". Archived from the original on 15 March 2023. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
  9. "World Air Forces 2014" (PDF). Flightglobal Insight. 2014. Archived (PDF) from the original on 25 December 2013. பார்க்கப்பட்ட நாள் 5 September 2014.
  10. Jackson, Paul; Peacock, Lindsay; Bushell, Susan ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2016–2017). "India". IHS Jane's All the World's Aircraft: Development & Production. Couldson. பக். 307–308. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0710631770. 
  11. "NAVY-DHRUV SPAT: Let's Stop Fighting, HAL Test Pilot Says". LiveFist. 11 June 2020. Archived from the original on 11 June 2020. பார்க்கப்பட்ட நாள் 11 June 2020.
  12. Luthra, Gulshan; Rai, Ranjit (September 2011). "IAF: ALH touches 20,000 feet and Cheetal 23,000". India Strategic. Archived from the original on 7 October 2011. பார்க்கப்பட்ட நாள் 6 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்.ஏ.எல்._துருவ்&oldid=3931150" இலிருந்து மீள்விக்கப்பட்டது