எச்ஏஎல் இலகுரக போர் உலங்கு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசந்த்
Prachand
வகை தாக்குதல் உலங்குவானூர்தி
உருவாக்கிய நாடு இந்தியா
உற்பத்தியாளர் இந்துசுதான் வானறிவியல் நிறுவனம்
வடிவமைப்பாளர் சுற்று இறக்கை ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையம்[1]
முதல் பயணம் 29 மார்ச் 2010
அறிமுகம் 3 அக்டோபர் 2022[2]
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் இந்தியத் தரைப்படை
இந்திய வான்படை
உற்பத்தி 2010–
தயாரிப்பு எண்ணிக்கை 19[3]
முன்னோடி எச்ஏஎல் துருவ்

எச்ஏஎல் பிரசந்த் (HAL Prachand) என்பது பல்பணி போர் உலங்கு வானூர்தி ஆகும். இது இந்தியாவில் இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் இந்தியத் தரைப்படை மற்றும் இந்திய வான்படையினரின் உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இலகுர உலங்கு வானூர்தியின் வடிவமைப்பு இந்தியப் பாதுகாப்புப் படைகளில் உள்ள துருவ் வடிவமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த இலகுர போர் உலங்கு வானூர்தியின் முதல் மாதிரி வடிவம் 4 பெப்ரவரி 2010 அன்று முதல் தரை ஓட்டத்தை முடித்தது.[4][5] இலகுரக போர் உலங்கு வானூர்தி (Light Combat Helicopter) என முன்பு பெயரிடப்பட்ட இந்த வானூர்தி 3 அக்டோபர் 2022 அன்று இந்திய வான்படையில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளது.[6]

உருவாக்கம்[தொகு]

உருசியாவில் உருவாக்கப்பட்ட எம்ஐ-35ன் செயல்பாடுகள் அதிக உயரமுள்ள போர்க்களப் பகுதிகளான கார்கில் போன்ற இடங்களில் திருப்திகரமாக இல்லாததால், இது போன்ற செயல்பாடுகளுக்காக மிக அதிக பறப்புயர்வு எல்லையை (service ceiling) கொண்ட ஒரு தாக்குதல் உலங்கு வானூர்தியின் தேவையை உருவாக்கியது.[7]

2006ல் இந்துசுதான் வானறிவியல் நிறுவனம் இலகுரக உலங்கு வானூர்தி உருவாக்கத்திற்கான அதன் திட்டத்தை அறிவித்தது. இந்தியத் தரைப்படை மற்றும் இந்திய வான்படையினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலகுரக உலங்கு வானூர்தியின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான நிதி அக்டோபர் 2006ல் வழங்கப்பட்டது. தற்போதைய வடிவமைப்பில் இந்த உலங்கு வானூர்தி 6500மீ பறப்புயர்வு எல்லையை கொண்டது.[8]

பயன்படுத்துபவர்கள்[தொகு]

 இந்தியா
  • இந்திய வான்படை: 10 பயன்பாட்டில் உள்ளது; 66 உலங்கு வானூர்திகள் வாங்க ஒப்பந்தமிடப்பட்டுளது.[9]
  • இந்தியத் தரைப்படை: 5 பயன்பாட்டில் உள்ளது; 90 உலங்கு வானூர்திகள் வாங்க ஒப்பந்தமிடப்பட்டுளது[10]

விவரக்குறிப்புகள்[தொகு]

பிரசந்த் உலங்கு வானூர்தி

தரவு எடுக்கப்பட்டது: [11][12][13][14]

பொது இயல்புகள்

  • குழு: 2
  • நீளம்: 15.8 m (51 அடி 10 அங்)
  • இறக்கை விரிப்பு: 4.60 m (15 அடி 1 அங்)
  • உயரம்: 4.70 m (15 அடி 5 அங்)
  • வெற்றுப் பாரம்: 2,250 kg (4,960 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 5,800 kg (12,787 lb)
  • சக்தித்தொகுதி: 2 × எச்ஏஎல்/தர்போமேக்கா சக்தி 1-எச்[15] , 1,068 kW (1,432[14] shp) each
  • முக்கிய சுழலி விட்டம்: 13.2 m (43 அடி 4 அங்)

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 280[16] km/h (174 mph; 151 kn)
  • வரம்பு: 700 km; 378 nmi (435[17] mi) with weapons
  • சகிப்புத்தன்மை: 3 hours 10 minutes
  • உச்சவரம்பு 6,500 m (21,325 அடி)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rotary Wing". Hindustan Aeronautics Limited. https://hal-india.co.in/Rotary%20Wing/M__326. 
  2. "Indigenously Designed and Developed Light Combat Helicopter (LCH) inducted into Indian Air Force". Press Information Bureau. PIB Delhi ( 3 October 2023 ). https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1864787. 
  3. "Analyst Meet 17 May 2023" (PDF). Hindustan Aeronautics Limited. 2023-05-17.
  4. "Indigenous attack copter ready for first flight - India - DNA". Dnaindia.com. 2010-02-08. பார்க்கப்பட்ட நாள் 2010-10-21.
  5. "HAL to flight test LCH prototype next month". Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
  6. "Light Combat Helicopter inducted into Air Force today: Its features, weapons it can carry". The Indian Express. 2022-10-03. பார்க்கப்பட்ட நாள் 2022-10-03.
  7. McKenna, James T. "India OKs Light Combat Helicopter Production." பரணிடப்பட்டது 2 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம் Rotor&Wing, 28 August 2017.
  8. Jackson, Paul; Peacock, Lindsay; Bushell, Susan ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2016–2017). "India". IHS Jane's All the World's Aircraft: Development & Production. Couldson. பக். 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0710631770. 
  9. "Rs 2.23 lakh crore-deal: India approves purchase of 97 Tejas aircraft, 156 Prachanda helicopters, other defence equipment". Moneycontrol. 2023-11-30. பார்க்கப்பட்ட நாள் 2023-11-30.
  10. "IAF's Strengthened Arsenal: Acquisition of 97 Tejas Mk1A Jets Marks a Milestone". Financial Express. 2023-11-30. பார்க்கப்பட்ட நாள் 2023-11-30.
  11. Hardy, James; Bedi, Rahul (23 February 2015). "Aero India 2015: Third LCH prototype breaks cover with new paintjob". Jane's Defence Weekly இம் மூலத்தில் இருந்து 5 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171205194557/http://www.janes.com/article/49257/aero-india-2015-third-lch-prototype-breaks-cover-with-new-paintjob. 
  12. Bedi, Rahul. "Aero India 2019: Thales to supply rocket launchers for HAL combat helos". Jane's Defence Weekly (21 February 2019) இம் மூலத்தில் இருந்து 22 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190222124917/https://www.janes.com/article/86756/aero-india-2019-thales-to-supply-rocket-launchers-for-hal-combat-helos. 
  13. "LCH". HAL India. Archived from the original on 20 November 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  14. 14.0 14.1 "LCH". Hindustan Aeronautics Limited. பார்க்கப்பட்ட நாள் 9 October 2021.
  15. "Ardiden 1H1 Shakti, the engine of the Indian Dhruv helicopter". Safran. பார்க்கப்பட்ட நாள் 9 October 2021.
  16. Jackson FRAes, Paul (27 April 2017). Jane's All the World's Aircraft: Development & Production 2017-2018 (2017-2018) (105th ). Jane's Information Group. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0710632500. 
  17. Jackson FRAes, Paul (27 April 2017) (in English). Jane's All the World's Aircraft: Development & Production 2017-2018 (2017-2018) (105th ). Jane's Information Group. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0710632500.