எசரிக்கியா கோலை ஓ104:எச்4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசரிக்கியா கோலை ஓ104:எச்4 குடலியக்குருதிப்பெருக்கை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்த அரிதாகக் காணப்படும் எசரிக்கியா கோலை பாக்டீரியாவாகும், இது 2011 ஈ.கோலை ஓ104:எச்4 தொற்று நிகழ்வுக்கு காரணமானது.[1] தெளியவியல் (serology) வகைப்பாட்டில் "ஓ" (O) என்பது பாக்டீரியாவின் கலச்சுவர் கொழுப்புப்பல்சக்கரைட்டுப் பிறபொருள், "எச்" (H) என்பது கசையிழைப் பிறபொருள் ஆகும்.

மரபணுத்தொகை வரிசை முறைப்படுத்தற்படி இவை புதிய மீ-நச்சுமை வகையைச் சார்ந்த பாக்டீரியாக்கள் என பீக்கிங் மரபணுத்தொகை நிலையத்தில் அறியப்பட்டது.[2][3]

2011 திடீர் நிகழ்வுக்கு முன்னர் ஓ104:எச்4 வகையால் ஏற்பட்டிருந்த ஒரே ஒரு சம்பவம் 2005ம் ஆண்டு கொரியாவில் ஒருபெண்ணில் உண்டாகிய சிவப்பணுச்சிதைவு சிறுநீரகச் செயலிழப்பு கூட்டறிகுறியாகும்.[4] ஓ104:எச்4 வகையைச் சார்ந்ததாக நம்பப்படும் வகையொன்றால் 1994இல் மொன்டானாவில் நிகழ்ந்த குருதிப்பெருக்கு குடல் அழற்சி ஏற்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "EHEC O104:H4, causing a severe outbreak in Germany (May 2011)" (PDF). Archived from the original (PDF) on 2011-06-26. பார்க்கப்பட்ட நாள் 2011-06-04.
  2. "BGI Sequences Genome of the Deadly E. Coli in Germany and Reveals New Super-Toxic Strain". BGI. 2011-06-02. பார்க்கப்பட்ட நாள் 2011-06-02.
  3. David Tribe (2011-06-02). "BGI Sequencing news: German EHEC strain is a chimera created by horizontal gene transfer". பார்க்கப்பட்ட நாள் 2011-06-02.
  4. Bae WK, Lee YK, Cho MS, Ma SK, Kim SW, Kim NH, et al.. A case of haemolytic uremic syndrome caused by Escherichia coli O104:H4. Yonsei Medical Journal. 2006 Jun 30;47(3):473–9. எஆசு:10.3349/ymj.2006.47.3.437. PubMed.
  5. Center for Disease Control (USA). (1995). Morbidity and Mortality Weekly Report 44(27):501–3


"https://ta.wikipedia.org/w/index.php?title=எசரிக்கியா_கோலை_ஓ104:எச்4&oldid=3545582" இலிருந்து மீள்விக்கப்பட்டது