எக்கார்ட் விம்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்கார்ட் விம்மர்
பிறப்பு(1936-05-22)22 மே 1936
பெர்லின், செர்மனி
துறைஉயிரியல் மற்றும் தீநுண்மயியல்
பணியிடங்கள்ச்டான் ப்ரூக் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கொட்டிங்கன் பல்கலைக்கழகம், செர்மனி
அறியப்படுவதுபோலியோத் தீநுண்மத்தின் உயிரியற் கண்டுபிடிப்பு, வேதியியல் முறையில் தீநுண்மத்தை உருவாக்கியது
விருதுகள்பெய்சரிங்க் தீநுண்மயியல் விருது 2011

எக்கார்ட் விம்மர் (Eckard Wimmer, பி. மே 22, 1936) ஒரு அமெரிக்க வாழ் தீநுண்ம ஆய்வாளர். இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் இளம்பிள்ளை வாதத்தின் நோய்க்காரணியான போலியோத் தீநுண்மத்தின் மூலக்கூறு உயிரியல் ஆய்வும் அதனைச் சார்ந்து அவர் உருவாக்கிய செயல்பாடுள்ள செயற்கை தீநுண்மமே யாகும். இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் இருக்கின்ற ச்டான் ப்ரூக் பல்கலைக்கழகத்தில் 2002ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற/குறிப்பிடத்தக்கப் பேராசிரியராய் பணியாற்றிவருகிறார். இவர் 2011ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க பெய்சரிங்க் தீநுண்மயியல் விருது பெற்றார்[1].

வாழ்க்கை[தொகு]

விம்மர் 1936ம் ஆண்டு, செர்மனியில் உள்ள பெர்லினில் பிறந்தார். இவர் 1959 செர்மனியில் உள்ள கொட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் வேதியற் துறையில் இளமறிவியற் பட்டமும், அதனைத் தொடர்ந்து 1962ல் முனைவர் பட்டமும் பெற்றார். 1964 வரை அப்பல்கலைக்கழகத்திலேயே கரிம வேதியியலில் பயிற்சியும் தொடந்து இரண்டாண்டுகள் கனடாவில் உள்ள பிரிட்டன் கொலம்பியாப் பல்கலைகழகத்திலும் பயிற்சியை முடித்தார்.

1966-1968 வரை இல்லினியாசு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து, பின்னர் 1966-1974 வரை புனித லூயிசு பல்கலைக்கழகத்தின், மருத்துவப்பள்ளியில் இருக்கின்ற நுண்ணுயிற் துறையிலும் அதனைத் தொடர்ந்து 1974 முதல் இன்று வரை நியூயார்க்கில் உள்ள ச்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி வருகிறார்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்கார்ட்_விம்மர்&oldid=2274480" இலிருந்து மீள்விக்கப்பட்டது