ஊக்கி (வேதியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேதியியலில் ஒரு வினையை கூடுதலான விரைவோடு நிகழத் துணை செய்யும் ஒரு பொருளுக்கு வினையூக்கி என்று பெயர். சுருக்கமாக இதனை ஊக்கி என்றும் அழைப்பர். வினையூக்கியாய்ப் பயன்படும் பொருளானது வேதியியல் வினையில் புணரும் பொருளாகவோ, விளையும் பொருளாகவோ பங்கு கொள்வதில்லை. அதாவது வேதியியல் வினையில் வினையுறும் ஒன்று அல்ல, எனினும் இது உடன் இருப்பதால் வேதியியல் வினையின் விரைவைக் கூட்டுகின்றது. வினை முடிந்தவுடன் எந்த மாறுதலும் இல்லாமல் வினையூக்கி தனித்து அதே நிலையில் நிற்கும். ஆங்கிலத்தில் வினையூக்கியை கேட்டலிஸ்ட் என்பர். இது கிரேக்க மொழிச் சொல்லாகிய κατάλυσις, (கட்டாலிசிஸ்) என்னும் பெயர்ச்சொல்லின் அடியாகிய அவிழ்த்துவிடு, கட்டுவிலக்கு என்னும் பொருள்படும் καταλύειν என்னும் வினைச்சொல் வழி பெற்றதாகும்.

வேதியியல் வினையில், வினியுறும் ஒரு பொருளாக இல்லாவிடினும், வினையூக்கி என்ன செய்கின்றதென்றால் வினை நிகழத் தேவைப்படும் ஆற்றலைக் குறக்கப் பயன்படுகின்ரது. இதனால் வேதியியல் வினை நிகழக் குறைவான ஆற்றலே தேவைப்படுவதால், வினை விரைவாக நிகழ்கின்றது. எனவே வினையூக்கியானது வேதியியல் வினை நிகழ ஆற்றல் குறைவான வேறு பாதையை அளிப்பதாக இருக்கின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஊக்கி_(வேதியியல்)&oldid=1548690" இருந்து மீள்விக்கப்பட்டது