உழலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உழலை என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. இது இக்காலத்தில் கறலாக்கட்டை சுற்றுவது போன்றது.

மாட்டுத் தொழுவங்களின் வாயிலில் உழலை மரம் போடப்பட்டிருக்கும். வீட்டு நிலைப் போல இரண்டு கம்பங்கள் நடப்பட்டிருக்கும். அவற்றில் உள்ள துளைகளில் நான்கைந்து அங்குலப் பருமனுள்ள மூங்கில் மரங்கள் சுமார் ஒன்றரை அடி இடைவெளியில் செருகப்பட்டிருக்கும். மாடுகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் ஒரு பக்கத்தில் உள்ள துளைகளிலிருந்து அந்த மரங்களைக் கழற்றி ஒரு பக்கமாக ஒதுக்கிவிடுவர். இதுதான் உழலைமரம்.

ஏறுதழுவல் விளையாட்டின்போது ஒரு காளை தன்னைத் தழுவிய ஆயனைக் கொம்பால் உழலைமரம் போலக் குத்திச் சுழற்றியதாம்.[1] உழலைமரம் போலக் காளைத் தன் கொம்பில் சுழற்றியதாகக் கூறப்படும் செய்தி சிலம்ப விளையாட்டில் கம்பு சுழற்றுவது போலப் பெரிய மரங்களைத் தூக்கிச் சுழற்றுவதைக் காட்டுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1.  
    இருதிறனா நீங்கும் பொதுவர் ...
    அவரைக்
    கழல உழக்கி எதிர் சென்று சாடி
    அழல்வாய் மருப்பினால் குத்தி
    உழலை மரத்தைப்போல் தொட்டன ஏறு - கலித்தொகை 106

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழலை&oldid=3208382" இலிருந்து மீள்விக்கப்பட்டது