நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உலகப் பாரம்பரிய தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நினைவுச் சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites) அல்லது உலக மரபுரிமை நாள் (World Heritage Day) அல்லது உலகப் பாரம்பரிய நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 18 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைத் தன்மைகளின் தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கைகளின் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.[1][2]

தோற்றம்[தொகு]

1982 ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் ஏப்ரல் 18 ஆம் நாள் "நினைவுச் சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாளாக கொண்டாடப் பரிந்துரைத்தது. 1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் நாளை, 'நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான நாளாக' என அறிவித்தது.[3]

இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு பரிந்துரைத்தது. அதன் படி இந்நாளில்

  • கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது
  • கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம், தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது
  • இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது
  • பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது
  • புத்தகங்கள், தபால் தலைகள் போன்றவற்றை அச்சிடுவது
  • பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது
  • பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது

என்று சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.gdrc.org/doyourbit/18_4-heritage.html
  2. http://www.indiaicomos.com/18april.html[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Smirnov, Lucile. "18 April - History - International Council on Monuments and Sites". www.icomos.org. Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.

வெளி இணைப்புகள்[தொகு]