உரோமைப் பேரரசு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உரோமைப் பேரரசு அல்லது ரோமப் பேரரசு (Roman Empire) ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் ஏகாதிபத்திய அரசு ஆகும். ரோமப் பேரரசானது 500-ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510 – கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் போர்களால் இப்பேரரசு வலிமை குன்றி பின்னர் பைசண்டைன் பேரரசாக கொன்ஸ்டண்டினோபிள் வீழ்ச்சி (1453) வரை ஆட்சியில் இருந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலப்பகுதி பலராலும் பலவிதமாகத் தரப்பட்டுள்ளது. கிமு 44 இல் ஜூலியஸ் சீசர் பேரரசின் மன்னனாக முடிசூடல், சீசரின் வாரிசான ஆகுஸ்டஸ் செப்டம்பர் 2, கிமு 31 இல் ஆக்டியம் போரில் வென்றமை ஆகியவை சிலவாகும்.
குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 கிமீkm² (2,300,000 sq மைல்) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது.
ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட செப்டம்பர் 4 கிபி 476 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் கடைசி மன்னன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் டயோகிளேசியன் என்ற கடைசிப் பேரரசன் கிபி 305 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. பைசண்டைன் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு 1453 இல் ஓட்டோமான் பேரரசிடம் வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது.
பொருளடக்கம் |
எல்லைகள் [தொகு]
வடக்கு எல்லை- அல்ப்ஸ் மலைத்தொடர்
கிழக்கு எல்லை-லஎட்ரியாட்டிக் கடல்
தெற்கு எல்லை-மத்திய தரைக்கடல்
மேற்கு எல்லை-மத்திய தரைக்கடல்
ஆட்சி முறை [தொகு]
ஆரம்பத்தில் சமூக அமைப்பு குலம் கோத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது.என்றாலும் உரோம் ஆக்கப்பட்டு சில காலத்தில் அதன் ஆட்சி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்னர் ஆட்சி முறை தொடங்கி முன்னூறு ஆண்டுகள் கடந்த பின்னர் அரச குடும்பத்தினர் தன்னிச்சையாக செயற்படத் தொடங்கினர். அதன் பின் ஒருபோதும் உரோமின் ஆட்சி அதிகாரத்தை மன்னர் ஒருவருக்கு வழங்குவதில்லை என்று தீர்மானித்து கி.மு. 509 இல் குழு ஆட்சி ஒன்றை செயற்படுத்தினர்.
உரோம குழு ஆட்சி [தொகு]
குழு ஆட்சி முறையில் கூடிய அதிகாரம் கொன்சல் என அழைக்கப்பட்ட இரு அதிகாரிகளிடம் வழங்கபட்டு இருந்தது.அவர்களின் ஆட்சி அதிகாரம் ஓராண்டுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.அக்காலகட்டத்தில் அவர்கள் படைத்தளபதியாகவும் நீதிபதியாகவும் செயற்பட வேண்டியிருந்தது.இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர்.குழு ஆட்சி முறையில் செனட் சபைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு இருந்தது.இச்சபையின் அங்கத்தவர்கள் மூத்த குடிகளிடமிருந்து தெரிவு செய்யப்பட்டனர்.
பேரரசு [தொகு]
உரோம் கட்டியெப்பப்பட்ட காலத்தில் உரோமுக்கு சொந்தமாக இருந்தது அதைச்சூழவுள்ள பிரதேசங்கள் மட்டுமே.கி.பி.270 அளவில் முழு இத்தாலியையும் உரோமர்கள் தமதாக்கிக் கொண்டனர்.அதன் பிறகு அவர்கள் சுபானியா,இங்கிலாந்து,பிரான்சு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பெரும் பகுதியை இணைப்பதில் வெற்றி கண்டனர்.
உரோமப் பேரரசர்கள் [தொகு]
- யூலியஸ் சீசர்
- ஒகசுடஸ் சீசர்
- நீரோ மன்னன்
- கேரகல்லா பேரரசன்
- மகா கொன்சுடண்டைன்
- ஐன்சுடீனியன் பேரரசன்
சட்டங்கள் [தொகு]
புராதன உரோமாநியர்களிடமிர்ந்து எமக்குக் கிடைத்த பெரும் பொக்கிசமாக உரோமானிய சட்டமுறை கருதத் தக்கது. கி.மு.150 இல் ஆரம்பமான உரோமாநியச் சட்டங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டு வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
உரோமச் சட்டங்களின் இயல்புகள் [தொகு]
- வழக்கை விசாரித்தல்.
- சாட்சிகளை ஒப்புவித்தல்.
- யூரி சபையின் மூலம் இறுதித் தீர்ப்பு வழங்குதல்.
- சந்தேக நபர் குற்றவாளியாகக் காணப்படும்வரை அவர் நிரபராதியாக கருதப்பட்டு தண்டனையிலிருந்து தடுக்கப்படல்.
- சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படல்.
சமயம் [தொகு]
உரோம மக்களுக்கு அவர்களுக்கென்று தனி மதம் இருக்கவில்லை.உலகில் காணப்பட்ட மற்ற கலாசாரங்களைப்போன்று இடி,மின்னல்,காற்று,வெயில்,கடல் போன்றவற்றை இயற்கை தெய்வங்களாக எண்ணி வழிபட்டனர்.அவர்களது வழிபாட்டில் முக்கிய இடம் வகித்த தெய்வங்கள்: யூப்பிட்டர் - வானத்தின் அதிபதி
மினர்வா - கைத்தொழிலுக்கு அதிபதி
மார்சு - யுத்தத்திற்கு அதிபதி
செரேசு - விளைச்சலுக்கு அதிபதி
வீனசு - காதலுக்கு athipathi
நெப்டியூன் - கடலுக்கு அதிபதி.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D.". Social Science History 3 (3/4): 125. doi:10.2307/1170959. http://links.jstor.org/sici?sici=0145-5532%281979%293%3A3%2F4%3C115%3ASADOEG%3E2.0.CO%3B2-H.
வெளி இணைப்புகள் [தொகு]
- ரோமப் பேரரசின் விரிவான வரலாறு
- Roman Empire Chronology World History Database
- Interactive Map of the Roman Empire